Skip to main content

Posts

Showing posts from November, 2021

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-November-2021

  ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானம், பகவான் ஆசியால்  சிறப்பாக நடைபெற் று வருகின்றது. அந்த வரிசையில்,  இந்த மாதம் (November-2021)   . ..  ஐப்பசி  மூன்றாம் சனிக்கிழமை யன்று  (06-11-2021) " எள்ளோதரை " அன்னதானமாக வழங்கப்பட்டது... ஐப்பசி  நான்காம்  சனிக்கிழமை யன்று  (13-11-2021)  " பொங்கல் "  அன்னதானமாக வழங்கப்பட்டது...  அடாத மழையிலும், இடைவிடாத அன்னதானம் நமது TDRS  குழுவின்  அங்கத்தினர் மூலமாக ... கார்த்திகை முதல்   சனிக்கிழமை யன்று  (20-11-2021)  " எள்ளோதரை "  அன்னதானமாக வழங்கப்பட்டது...  கார்த்திகை இரண்டாம் சனிக்கிழமை (27-11-2021) மற்றும் வைக்கத்தஷ்டமி தினத்தை முன்னிட்டு, தேங்காய் சாதம், புளியோதரை மற்றும் பொங்கல் அன்னதானமாக வழங்கப்பட்டது... அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி...  ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆ

வைக்கத்தஷ்டமி பூஜை | வைத்ய நாத அஷ்டகம் | நமஸ்கார பிரார்த்தனை

வைக்கத்தஷ்டமி பூஜை (27-11-2021) ... ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம். இன்று (27-11-2021) வைக்கத்தஷ்டமி பூஜை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இடம்:  ஸ்ரீநிவாசா மஹால், பாளையம்கோட்டை, திருநெல்வேலி  நாள்: 27-11-2021 (சனிக்கிழமை) நிகழ்வில் நேரடியாக கலந்து கொண்டவர்கள் அனைவரும், வைத்ய நாத அஷ்டகம் சொல்லி நமஸ்காரம் செய்து லோக க்ஷேமம் வேண்டி அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.  நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக 'வைத்ய நாத அஷ்டகம்' பிரதி (Print) எடுத்து கொடுக்கப்பட்டது.  நிகழ்வில்  நமது ஒரு துளி ஆன்மீகம் Youtube சேனல் மூலமாக நேரலையில், அவரவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பல அன்பர்கள் பூஜை நிகழ்வுகளை தரிசனம் செய்தனர். தாங்கள் இருக்கும் இடத்திலேயே நமஸ்காரம் செய்து நம்முடன் மானஸீகமாக இணைந்திருந்தனர். நமக்கு தனித்தகவல் மூலம் பலர் நன்றியினை பகிர்ந்து கொண்டனர். பூஜை முடிந்த பிறகு,  மிக சிறப்பாக  அன்னதான பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.  நிகழ்வில் "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா"வின் சிறிய பங்களிப்பினையும்  வழங்க நமக்கு வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு எம

லோக க்ஷேமம் வேண்டி குரு பெயர்ச்சி நவக்கிரஹ ஷாந்தி ஹோமம்.

குரு பெயர்ச்சி நவக்கிரஹ ஷாந்தி ஹோமம் ...    ...நமஸ்காரம்... ...லோக க்ஷேமம் வேண்டி... ..."தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  குரு பெயர்ச்சி நவக்கிரஹ ஷாந்தி ஹோமத்தின் ஸங்கல்பத்தில், முன்னதாக பெயர் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் ஸங்கல்பம் செய்யப்பட்டது... இடம்: ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், சத்திரம் புதுக்குளம், திருநெல்வேலி 627358.  தம்பதி ஸமேத நவக்கிரஹ சன்னதியில் உள்ள குரு ப்ரஹஸ்பதி பகவான். நாள்; 13-11-2021 (சனிக்கிழமை) ஒவ்வொரு பெயர்கள் மற்றும் நட்சத்திரம் அனைத்தும் தனித்தனியாக சொல்லி ஸங்கல்பம் செய்யப்பட்டது... நமது ஒரு துளி ஆன்மீகம் வாட்ஸாப் குழு மூலம், முன்னதாக பெயர், நட்சத்திரம் பதிவு செய்த அனைவருக்கும் ஸங்கல்பம் செய்யப்பட்டது.  பிரசாதம் வேண்டி பதிவு செய்தோருக்கு தனியாக பிரசாதம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது... முழு காணொளி.... முக்கியமான ஸ்லோகங்கள், மந்திர விளக்கங்கள் வீடியோ வடிவில் அறிய விரும்பினால், நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள். ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்

முருகனை "அருள் மின்னல்" என அழைக்கலாம்... ஏன் ?

காஞ்சி மஹா பெரியவா - தெய்வத்தின் குரலில் இருந்து ... சகல லோகத்தையும் – ஜீவர்களையும் ஜடத்தையும் – தன் சகல சொத்தாக க்  (ஸ்வம்) கொண்டிருக்கிறவர்தான் ‘ஸ்வாமி’. அந்தப் பெயர் ஏன் சுப்ரம்மணியருக்கு விசேஷமாக வந்தது? அத்தனை பெருமை அவருக்கு ஏன் என்று பார்ப்போம். மேகத்தில் மின்னல் பளிச்சிடுகிறது. க்ஷணகாலம்தான் – அதற்குள் அது மகாஜோதியை, மகாசக்தியைக் கொட்டி விடுகிறது. எத்தனையோ ‘பவர் ஹவுஸ்’களில் ‘ஜெனரேட்’ செய்ய முடியாத அளவுக்கு மின்சாரத்தைப் பாய்ச்சி விடுகிறது. இத்தனை சக்தி இப்போதுதான் மின்னலாகத்  தோன்றினாலும் , இதற்குமுன் அது இல்லாமல் இல்லை. இல்லாதது எப்படித் தோன்ற முடியும்?  ஸயன்ட்டிஸ்ட்கள் மின்சாரம் எப்போதும் எங்கேயும் நிறைந்திருக்கிறது என்கிறார்கள். ஆனால், சாதாரணமாக அது தெரிவதில்லை. பின் எப்போது தெரிகிறது? நீராவி மேகமாக மாறித் திரிகிறபோது, ஒன்றாக இருக்கிற மின்சாரம் சில பகுதிகளில் வல அம்சமாகவும் (பாசிடிவ்), சிலவற்றில் இட அம்சமாகவும் (நெகடிவ்) பிரிந்து நிற்கிறது. பிற்பாடு மழைச் சமயத்தில் மேகங்களில் ஒருவிதமான நெரிசல், குமுறல் உண்டாகிறபோது, வல அம்ச (Positively charged) பகுதிகளும் இட அம்சப் பகுதிகளும

தந்தையை மிஞ்சிய தனயன் ...

காஞ்சி மஹா பெரியவா - தெய்வத்தின் குரலில் இருந்து ... இமயமலை மகா பெரியதாக இருக்கலாம். கடுகு சின்னஞ் சிறியதாக இருக்கலாம். ஆனால், இமயமலைக்குள் இருக்கிற அத்தனை அவயவங்கள் கடுகுக்குள்ளும் இருக்கும். கடுகைக்கூட அப்படியே பிரித்துக் கொண்டே போகலாம். கடைசியில் ஒர் அணு வந்து நிற்கும். அப்புறம் பிரிக்க முடியாது.  சர்வ வியாபகமாக, இத்தனை அண்ட சராசரங்களாகப் பிரிந்திருக்கிற சிவ – சக்திகளை பிரிக்க முடியாமல் ஓரிடத்தில் பார்க்க வேண்டும் என்றால், அது அவர்களது அன்பு ஊற்றெடுக்கிற இருதய மத்தியில்தான். பலவாக அவர்களிடமிருந்து விரிந்திருப்பதெல்லாம் ஒன்றாகக் குவிகிறது. இந்த அன்பு என்கிற அணுவில்தான். அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ (து) ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவ (து) ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே என்கிறார் திருமூலர். அன்பு ஒன்றே உள்ள அந்த மனஸைத் தெரிந்து கொண்டு விட்டால், அப்புறம் நம் மனஸும் நூறாயிரம் திசைகளில் ஒடாது; அன்பிலேயே முழுகிக் கரைந்து அன்பாகவே ஆகிவிடும். அருணகிரிநாதன் பெற்ற அநுபூதி இதுதான். பரமேசுவரன் வஸ்து (Matter); அம்பாள் அதன் சக்தி (Energy) என்ற ஸயன்ஸ் சூத்திரம

திருவண்ணாமலை கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா-2021

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா விவரம். (07-11- 2021  முதல் 23-11-2021 வரை )   ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:              திருநெல்வேலி. #Tiruvannamalai #Tiruvannamalai_Dheepam #MahaBharaniDheepam #OruThuliAanmeegam #ThaamiraaDharmaRakshanaSabha

குமரன் / ஸ்கந்தன் / கார்த்திகேயா - பொருள் விளக்கம்...

காஞ்சி பெரியவா அவர்களின் தெய்வத்தின் குரலில் இருந்து...   குமரன் / ஸ்கந்தன் / கார்த்திகேயா - பொருள் விளக்கம்... அருணகிரிநாதர் ஸுப்ரம்மண்ய ஸ்வாமியிடமிருந்து தமக்குக் கிடைத்த அத்வைத அநுக்கிரகத்தையே “கந்தர் அநுபூதியில்” விசேஷமாகச் சொல்கிறார். அவர் தம்முடைய திருப்புகழ் பாட்டுக்கள் ஒவ்வொன்றையும் ‘பெருமாளே’ என்கிற வார்த்தையுடனேயே முடிக்கிறார். பொதுவாக ‘பெருமாள்’ என்றால் மகாவிஷ்ணுதான். ஒரு ஊரில் ‘ஈச்வரன் கோயில்’, ‘பெருமாள் கோயில்’ என்ற போது ‘பெருமாள் கோயில்’ என்றால் விஷ்ணு ஆலயம்தான். சிவசக்தியின் பூர்ணதேஜஸாக இருக்கப்பட்ட சுப்ரம்மண்யத்தை இப்படி பெருமாளாகச் சொல்லச் சொல்லி அவர் முடிப்பதும் அழகாகத்தான் இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே பொதுவில் இவரை மகாவிஷ்ணுவுடன் சம்பந்தப்படுத்திப் பேசுவது அதிகம். ‘மருகன்’ என்றும் முருகனைச் சொல்கிறோமே, இது எதனால்? அவர் அம்பாளுக்கு சகோதரராக இருக்கிற மகாவிஷ்ணுவின் மருமகன் என்பதால்தான். ‘மால் மருகன்’ என்கிறோம். மருமகன் என்றால் மாப்பிள்ளை என்று அர்த்தம். மருமகப்பிள்ளை என்பார்கள். பூர்வத்தில் வள்ளி தேவசேனைகள் மகாவிஷ்ணுவின் புத்திரிகள்தான். அதனால் மாமாவான விஷ்ணு, முருகனுக்க

ஏகாதசி சிறப்பு பூஜை - லோக ஷேம பிரார்த்தனை-01-11-2021

  ஏகாதசி சிறப்பு பூஜை ...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக ஏகாதசியன்று, வழக்கமாக பெருமாளுக்கும், தாயாருக்கும் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்,  "ரமா ஏகாதசி"   தினமான  இன்றும்  (01-11-2021) பகவான் ஆசியால் சிறப்பாக நடைபெற்றது.  லோக ஷேமம் வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது... பெருமாள் தரிசனம் இதோ உங்களுக்காக... இந்த மாத பூஜா தினங்கள் பற்றி அறிய வேண்டுமா ? இந்த இணைப்பை சொடுக்கவும்... ஹரி ஓம்... ...லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து... ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித: #Ramaa_Ekadasi #November_Ekadasi #OruThuliAanmeegam #ThaamiraaDharmaRakshanaSabha