Skip to main content

Posts

Showing posts from March, 2014

Roof Top Garden with Subsidy

காய்கறி தோட்டம் உங்கள் வீட்டு மாடியில் ...... வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் புதிய   திட்டத்தை  தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது . " நீங்களே செய்து பாருங்கள் ' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் முதல் கட்டமாக சென்னை மற்றும் கோவையில் புதன்கிழமை ( டிச .18, 2013)  தொடங்கப்பட்டது . இதற்கான தொடக்க விழா வேளாண்துறை அமைச்சர் செ . தாமோதரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது .  இந்தத் திட்டத்தின் கீழ் , வீட்டு மாடியில் தோட்டம் அமைக்கத் தேவையான காய்கறி விதைகள் , உரங்கள் , பாலிதீன் பைகள் உள்ளிட்டவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன . என்னென்ன காய்கறிகள் : கத்தரி , வெண்டை , தக்காளி , மிளகாய் , அவரை , கொத்தவரை , முள்ளங்கி , கீரைகள் , கொத்தமல்லி ஆகியவற்றை மாடி தோட்டத்தில் வளர்க்கலாம் . இந்த செடிகள் அனைத்தையும் வளர்க்க மொட்டை மாடியில் 160 சதுர அடி இடம் இருந்தால் போதுமானது . இதற்கான மகசூல் காலம் 30 நாள்களில் இருந்து 6 மாதங்கள் வரை ஆகும் . மாடித் தோட்டம் அமைப்ப