Skip to main content

Posts

Showing posts with the label சிறப்புக்கட்டுரை

அதிசயம், அற்புதம்... ஆலயத்தில் ஆண்டவனின் ஆசிர்வாதம் ... Miracle Photo

...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  பொதுவாக ஒவ்வொரு ஆலயங்களிலும் மஹா ஸம்ப்ரோக்ஷணம் என்று சொல்லப்படக்கூடிய கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுது,  நமது ஹிந்து சநாதன தர்மத்தில் 'ஓமன்' என்று சொல்லப்படக்கூடிய ஒரு சில சமிக்ஞைகள்  மூலமாக அந்த ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பகவானின் ஆசிர்வாதம் கிடைக்கப்பெற்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.  உதாரணத்திற்கு,  யாருக்குமே அறிமுகம் இல்லாத யாராவது ஒரு நபர் மிக முக்கியமான  நேரத்தில் வந்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு காணாமல் போய் விடுவது, (சமீபத்தில் கூட திருச்செந்தூரில் கடலில் இருந்து பழைய சிலை ஒன்று வெளிப்பட்டபோது இதே போல் ஒரு நிகழ்வு நடைபெற்றது) விமான கலச அபிஷேகம் நடைபெறும் நேரத்தில் கருடாழ்வார் வானத்தில் வட்டமிடுவது மற்றும் மிக முக்கியமான நிகழ்வாக இறைவன் ஜோதி ஸ்வரூபமானவன் என்பதை உணர்த்தும் வண்ணம் பல நேரங்களில் ஹோம குண்டம் அல்லது தீபாராதனை காண்பிக்கும் பொழுது ஒரு சில வித்யாசமான ரூபங்களில் இறைவன் தோன்றி அருள் பாலிப்பது ...   என இவை யாவும் ஒரு சமிக்ஞைகளே...  அந்த வகையில் நமது திர...

உங்கள் உடலுக்கு ஏற்ற உணவை தேர்ந்தெடுப்பது எப்படி ?

உணவின் தன்மைகள் குறித்து சத்குரு அவர்களின் விளக்கம்...   உங்களது உடல் எந்தவிதமான உணவிலிருந்து, ஊட்டம் பெறுவதற்குப் போராடாமல், அதிகமான தளர்வு நிலையில் இருக்கிறதோ அந்தவிதமான உணவை நீங்கள் சாப்பிடவேண்டும். உங்கள் வியாபாரத்தை சரிவரச் செய்யவேண்டும் என்றாலோ அல்லது ஒழுங்காக கல்வி பயிலவேண்டும் என்றாலோ அல்லது எந்தவொரு செயலையும் சரியாக செய்யவேண்டும் என்றாலோ, உங்களது உடல் தளர்வு நிலையில் இருப்பது மிகமிக முக்கியமானது.  ஒரு சைவ உணவாளராக மாறுவது எப்படி ? உங்கள் உடலுக்குள் செல்லும் உணவின் தரத்தைப் பொறுத்தவகையில், அசைவ உணவைக்காட்டிலும் சைவ உணவானது நிச்சயமாக உடலமைப்புக்கு மிகவும் மேலானது. தாவர உணவை அதன் உயிரோட்டமான தன்மையில் நீங்கள் சாப்பிடும்போது, அது எவ்வளவு வித்தியாசமாக செயல்படுகிறது என்பதை பரிசோதனை செய்துதான் பாருங்களேன். பச்சையாக, சமைக்கப்படாத நிலையில் சாப்பிடக்கூடியது என்னவாக இருந்தாலும், முடிந்த அளவுக்கு உயிரோட்டமான உணவைச் சாப்பிடவேண்டும் என்பதே இதன் நோக்கம்.  ஒரு உயிரோட்டமான அணு, உயிரை உறுதிப்படுத்துவதற்கான அனைத்தையும் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு உயிரோட்டமான அணுவை உட்கொண்டால், உங்கள் ...

ஸ்ரீ ராம நவமி - அன்று சொல்ல வேண்டிய எளிய மந்திரம் என்ன ?

 ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ஸ்ரீ ராம நவமி ... பாரத தேசத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு உத்ஸவம். அன்று சொல்லவேண்டிய எளிய மந்திரம் என்ன ? ஸ்ரீ ராம நவமியை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று காஞ்சி "மஹா பெரியவா" கூறிய கருத்துக்களை அப்படியே இங்கு பகிர்ந்துள்ளோம்...  “நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்” (கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14) ஸ்ரீ ராமநவமியன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் கம்பராமாயணத்தில் ஸ்ரீ ராமாவதார கட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பாக்களைப் பாராயணம் செய்ய வேண்டும். வேய்புனர் பூசமும் விண்ணுளோர்களும் தூயகற் கடகமும் எழுந்து துள்ளவே சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும் வித்தக முனிவரும் விண்ணு ளோர்களும் நித்தரும் முறைமுறை நெருங்கி யார்ப்புறத் தத்துறல் ஒழிந்துநீள் தருமம் ஓங்கவே. ஒருபகல் உலகெலாம் உதரத்துட் பொதிந் தருமறைக் குணர்வரும் அவனை யஞ்சனக் கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத் திருவுறப் பயந்தனள் திறங்ககொள் கோசலை. (கம்ப...

ராகு காலம் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள ஒரு புதிய பக்திமொழி...

  ராகு காலம்...நினைவில் கொள்ள ஒரு புதுமொழி...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...   எந்த ஒரு நல்ல காரியத்தையும், நாம் ராகு காலத்தில் தொடங்குவது கிடையாது. ஒரு நாளில் 01:30 மணி நேரம் (சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை) ராகு கால நேரமாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ராகு காலம் ஒவ்வொரு தினமும் வெவ்வேறு நேரங்களில் வரக்கூடியது. அதனால், நாம் பொது இடங்களில் இருக்கும் சமயங்களிலோ அல்லது உடனடியாக ஒரு காலண்டர் அல்லது பஞ்சாங்கம் போன்றவற்றை பார்க்க முடியாமல் இருக்கும் பொழு தோ ,  மிக முக்கியமாக தற்போதைய உயிர்நாடியான மொபைல் நம் கையில் இல்லாமல் இருக்கும் பொழுதோ  இதனை எப்படி எளிதாக நினைவில் வைத்துக்கொள்வது ? இதற்கென காலம், காலமாக ஒரு பழமொழி பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், அது ஒரு ஆன்மீக தகவலை விளக்கும் பொழுது,  ஆன்மீக  சம்பந்தம் இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு பழமொழி போன்று  இந்த சிறியவனுக்கு தோன்றியது.  ஒரு ஆன்மீக தகவலை, ஆன்மீகத்தோடு தொடர்பு படுத்தி விளக்குவதே சால சிறந்தது அல்லவா ?  சரி, இப்பொழுது பழமொழி மற்றும் புது மொழி இரண்டையும் பகிர்கின்றோம்....

ஶ்ரீ ஆதி³லக்ஷ்மீ அஷ்டோத்ர நாமாவளி

...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ஶ்ரீ   ஆதி ³ லக்ஷ்மீ அஷ்டோத்ர நாமாவளி... (சிறு குறிப்பு:    நம: என்று முடியும் இடத்தில் "நமஹ" என்று உச்சரிக்க வேண்டும்) ... ௐ   ஶ்ரீம்  ஆதி ³ லக்ஷ்ம்யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  அகாராயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  அவ்யயாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  அச்யுதாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  ஆனந்தா ³ யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  அர்சிதாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  அனுக் ³ ரஹாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  அம்ரு ʼ தாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  அனந்தாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  இஷ்டப்ராப்த்யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  ஈஶ்வர்யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  கர்த்ர்யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  காந்தாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  கலாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  கல்யாண்யை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  கபர்தி ³ னே   நம ꞉ ௐ   ஶ்ரீம்  கமலாயை   நம ꞉ ௐ   ஶ்ரீம்  காந்திவர்தி ⁴ ன்யை   ...

மார்கழி மாத மகிமை...

  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... மார்கழி மாத மகிமை...  காஞ்சி மஹா பெரியவா உரையில் இருந்து ... இதனை "பீடுடை மாதம்" என்று அழைப்பார்கள். இந்த சொல் நாளடைவில் திரிந்து 'பீடைமாதம்' என்று வழக்கில் வந்துவிட்டது. "பீடுடை மாதம்" எனில் சிறந்த, பெருமைவாய்ந்த, மதிப்புள்ள மாதம் என்று பொருள். தநுர்மாஸம் என்றும், மார்கழி என்று தமிழில் திரிந்து வந்திருக்கிற மார்க்கசீர்ஷம் என்றும் இரண்டு பெயர் ஏன் என்றால், வருஷத்தைக் கணக்குப் பண்ணுவதில் இரண்டு விதங்கள் இருக்கின்றன. அவற்றில் ‘ஸௌரமானம்’ என்பது ஸுர்யனை வைத்துப் பண்ணினது. பன்னிரண்டு ராசிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மாஸமாக ஸுர்யன் தாண்டிக்கொண்டே போய் ஒரு வருஷம் பூர்த்தியானவுடன் மறுபடி ஆரம்பித்த ராசிக்கே வருகிற மாதிரி பூமி அதைப் பிரதக்ஷிணம் பண்ணிக் கொண்டு போகும் போது தோன்றும்.  வாஸ்தவத்தில் ஸுர்யன் இருந்தபடிதான் மத்தியில் இருப்பது. பூமிதான் அதைச் சுற்றிக் கொண்டே போய் ஒரு வருஷம் ஆனதும் ஆரம்பித்த இடத்திற்கே வருவது. ஆனால் பார்வைக்கு மாறுதலாகத் தெரியும். பூமியின் அந்த ஒரு ஸுர்ய ப்ரதக்ஷிணம் மாஸத்திற்கு ஒரு ராசி வீதம் நடந்து ...