Skip to main content

Posts

Showing posts from April, 2022

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-April-2022

     ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...  ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ...ஐயமிட்டு உண்...  என்ற சொல்லுக்கேற்ப, நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக,  அவ்வப்போது விசேஷ நாட்களிலும் / மஹாளய பட்சம் முழுவதும் நடைபெறும் அன்னதானம் தவிர...  பகவான்  ஆசியாலும் / அனுக்கிரஹத்தாலும்... வழக்கமாக சனிக்கிழமை தோறும்,  தொடர்ந்து  நடைபெற்று வரும் அன்னதானம்,  கடந்த 2020 ஏப்ரல் முதல் தொடர்ந்து  சிறப்பாக நடைபெற் று வருகின்றது.  அந்த வரிசையில்,  இந்த மாதம் (April-2022) . ..  (105 - 109- வது வார சனிக்கிழமை)... " பங்குனி "   மூன்றாம் சனிக்கிழமை யன்று  (02-04-2022),    தக்காளி சாதம்  &  தேங்காய் சாதம்  அன்னதானமாக வழங்கப்பட்டது... " பங்குனி "   கடைசி  சனிக்கிழமை யன்று  (09-04-2022),  தேங்காய் சாதம்   அன்னதானமாக வழங்கப்பட்டது... "சித்திரை" முதல்  சனிக்கிழமை யன்று  (16-04-2022)  தக்காளி சாதம்,   தேங்காய் சாதம்  &  புளியோதரை  அன்னதானமாக வழங்கப்பட்டது. " சித்திரை "    இரண்டாம்  சனிக்கிழமை யன்று  (23-04-2022)  தேங்காய் சாதம்  &  புளியோதரை 

உங்கள் உடலுக்கு ஏற்ற உணவை தேர்ந்தெடுப்பது எப்படி ?

உணவின் தன்மைகள் குறித்து சத்குரு அவர்களின் விளக்கம்...   உங்களது உடல் எந்தவிதமான உணவிலிருந்து, ஊட்டம் பெறுவதற்குப் போராடாமல், அதிகமான தளர்வு நிலையில் இருக்கிறதோ அந்தவிதமான உணவை நீங்கள் சாப்பிடவேண்டும். உங்கள் வியாபாரத்தை சரிவரச் செய்யவேண்டும் என்றாலோ அல்லது ஒழுங்காக கல்வி பயிலவேண்டும் என்றாலோ அல்லது எந்தவொரு செயலையும் சரியாக செய்யவேண்டும் என்றாலோ, உங்களது உடல் தளர்வு நிலையில் இருப்பது மிகமிக முக்கியமானது.  ஒரு சைவ உணவாளராக மாறுவது எப்படி ? உங்கள் உடலுக்குள் செல்லும் உணவின் தரத்தைப் பொறுத்தவகையில், அசைவ உணவைக்காட்டிலும் சைவ உணவானது நிச்சயமாக உடலமைப்புக்கு மிகவும் மேலானது. தாவர உணவை அதன் உயிரோட்டமான தன்மையில் நீங்கள் சாப்பிடும்போது, அது எவ்வளவு வித்தியாசமாக செயல்படுகிறது என்பதை பரிசோதனை செய்துதான் பாருங்களேன். பச்சையாக, சமைக்கப்படாத நிலையில் சாப்பிடக்கூடியது என்னவாக இருந்தாலும், முடிந்த அளவுக்கு உயிரோட்டமான உணவைச் சாப்பிடவேண்டும் என்பதே இதன் நோக்கம்.  ஒரு உயிரோட்டமான அணு, உயிரை உறுதிப்படுத்துவதற்கான அனைத்தையும் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு உயிரோட்டமான அணுவை உட்கொண்டால், உங்கள் உடலமைப்பின் ஆர

ஸ்ரீ ராம நவமி - அன்று சொல்ல வேண்டிய எளிய மந்திரம் என்ன ?

 ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  ஸ்ரீ ராம நவமி ... பாரத தேசத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு உத்ஸவம். அன்று சொல்லவேண்டிய எளிய மந்திரம் என்ன ? ஸ்ரீ ராம நவமியை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று காஞ்சி "மஹா பெரியவா" கூறிய கருத்துக்களை அப்படியே இங்கு பகிர்ந்துள்ளோம்...  “நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்” (கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14) ஸ்ரீ ராமநவமியன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் கம்பராமாயணத்தில் ஸ்ரீ ராமாவதார கட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பாக்களைப் பாராயணம் செய்ய வேண்டும். வேய்புனர் பூசமும் விண்ணுளோர்களும் தூயகற் கடகமும் எழுந்து துள்ளவே சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும் வித்தக முனிவரும் விண்ணு ளோர்களும் நித்தரும் முறைமுறை நெருங்கி யார்ப்புறத் தத்துறல் ஒழிந்துநீள் தருமம் ஓங்கவே. ஒருபகல் உலகெலாம் உதரத்துட் பொதிந் தருமறைக் குணர்வரும் அவனை யஞ்சனக் கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத் திருவுறப் பயந்தனள் திறங்ககொள் கோசலை. (கம்ப ராம