Skip to main content

Posts

Showing posts from October, 2019

ஷண்முக கவசம் - (தமிழில்) - Shunmuga Kavasam

  ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய ஷண்முக கவசம்... அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள ( து ) ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க . ... ... ... ... (1) ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க . ... ... ... ... (2) இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க , வாயை முருகவேள் காக்க , நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க துரிசஅறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க . ... ... ... ... (3) ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க , எந்தன் ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க . ... ... ... ... (4) உறுதியாய் முன்கை தன்னை உ

கந்த குரு கவசம் (தமிழில்) - Kandha Guru Kavasam

ஸ்ரீமத்   சத்குரு   சாந்தானந்த   சுவாமிகள்   அருளிய     'கந்த  குரு   கவசம் ' விநாயகர் வாழ்த்து கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே முஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... (5) சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே . செய்யுள் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குகா சரணம் சரணம் ...... (10) குருகுகா சரணம் குருபரா சரணம் சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... (15) அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர் அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய் தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... (20) காத்திடுவாய் கா