Skip to main content

Posts

Showing posts from August, 2020

விநாயகர் (சதுர்த்தி) ஸ்பெஷல்...

இந்தக் கட்டுரையில்... விநாயகரை வழிபட எளிய மந்திரம்? எந்த நட்சத்திரக் காரர்கள் எப்படி வழிபட வேண்டும்? நினைத்ததை அடைய எவ்வாறு கணபதி ஹோமம் செய்ய வேண்டும் ?  முக்கியமான மெகா கணபதிகள் பற்றி சிறு தகவல்.  விநாயகர் சதுர்த்தி என்றாலே, நாம் அருகில் உள்ள பல விநாயகர் கோவிலுக்கு செல்வது வழக்கம்.  வித விதமான அலங்காரங்களில் ஆனை முகத்தா னை பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு அழகு தான்... ஒரு சில முக்கியமான விநாயகர்  கோவில்கள் பற்றி இங்கு காண்போம்.             மெகா கணபதிகள்: 1. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர். 2. திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார். 3. திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார். 4. திருச்செட்டாங்குடி வாதாபி கணபதி. 5. செதலபதி ஆதி விநாயகர். 1 .  பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்: பிள்ளையார் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிள்ளையார்பட்டிதான். மருதங்குடி, திருவீங்கைக்குடி, ஈக்காட்டூர் என்றெல்லாம் அழைக்கப் பட்ட ஊர், பிள்ளையார் என்று 'ஜீங்'கென்று அமர்ந்தாரோ அன்று முதல் 'பிள்ளையார்-பட்டி' ஆகிவிட்டது. 'வாதாபி கணபதி'நம் ஊருக்கு வந்

ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகள் பகுதி - "குறட்டை விடுதல்"

ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகள் - "குறட்டை விடுதல்" நிறுத்த என்ன செய்ய வேண்டும் ?!  குறட்டை விடுதல் (Snoring)  என்பது  ஒரு நோயல்ல . ஏனென்றால் அதனால் ஒருவர் துன்புறுவதில்லை . ஆனால், அவர் அருகில் உள்ளவர்கள் துன்பப்படுகிறார்கள். குறட்டை வருவதற்கான காரணம் யாவை  ?  அதைத்  தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ?   காரணங்களில் முக்கியமானது பொடி போடுதல் . பொடியை மூக்கினுள் அடிக்கடி சர் என்று போட்டு இழுப்பதால் மூக்கினுள்ளே உள்ள ஈரப்பசை காய்ந்து விடுகிறது . மூக்கின் வறட்சியான பாதையினுள் செல்லும் சூடான , தூசியுடன் உள்ள காற்று மேன்மேலும் வறட்சியை தோற்றுவிக்கிறது . வறட்சியான மூக்குத் துவாரத்தின் வழியே செல்லும் காற்று சப்தத்தை தோற்றுவிக்கிறது . அடுத்து உணவுப்பழக்கம் ...   உணவில் வறட்சியை தோற்றுவிக்கும் கடலை , பயறு , பருப்பு போன்றவைகளை தணலில் வாட்டி பொறிகடலையாகவோ , சுண்டல் அல்லது வடையாகவோ அடிக்கடி சாப்பிடுதல் , அவைகளை சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீரை அருந்துதல் , காரம் , கசப்பு துவர்ப்புச் சுவை கொண்ட உணவு வகைகளை அடி