அங்கோர் வாட் (கம்போடியா விஷ்ணு கோவில் ): உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? இரண்டாம் " சூர்யவர்மன் " என்ற மன்னன் இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினார் . இந்த இடம் தான் அவரின் தலை நகரமாக செயல்பட்டது . " விஷ்ணு " கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டு தலங்களிலேயே மிகவும் பெரியது ! !. இரண்டாம் சூர்யவர்மன் ... அங்கோர் வாட் என்றால் தற்போது "City Temple" என்று அழைக்கப்படுகிறது. முன்னர், வடமொழியில் இது "Vara Vishnulokha" (வர விஷ்ணு லோகம்) என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்... திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் ??!!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ...

