அங்கோர் வாட் (கம்போடியா விஷ்ணு கோவில் ):
உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ?அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
இரண்டாம் "சூர்யவர்மன்" என்ற மன்னன் இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினார். இந்த இடம் தான் அவரின் தலை நகரமாக செயல்பட்டது . "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டு தலங்களிலேயே மிகவும் பெரியது ! !.
இரண்டாம்
சூர்யவர்மன்...
அங்கோர் வாட் என்றால் தற்போது "City Temple" என்று அழைக்கப்படுகிறது. முன்னர், வடமொழியில் இது "Vara Vishnulokha" (வர விஷ்ணு லோகம்) என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்... திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் ??!!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்று சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!
இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது . இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் சிறிது, சிறிதாக, "புத்த" வழிபாட்டு தளமாக மாற்றப்பட்டு, இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது ?!
பின்னர் 'Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் "சுற்றுலா பதிவு" புத்தகத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டில்) இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !!
பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது அமைந்திருந்ததால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதிலமடையத் தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.
பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!. இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !
இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த எந்த ஒரு கேமராவிலும் இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும், கோவிலின் நேர் எதிரில் நின்றோ, அல்லது அதன் பக்கவாட்டில் நின்றோ படம் பிடிக்க முடியவில்லை. !!!
வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே ???
கோவிலை சுற்றிலும் சிற்பங்கள் ஏராளம், ஏராளம். இதோ ஒரு சில புகைப்படம் உங்கள் பார்வைக்கு. வாசுகியை மத்தாக கொண்டு பாற்கடலை, தேவர்களும், அசுரர்களும் கடையும் காட்சி. மிக அற்புதம்... இதில் 92 அசுரர்களையும், 88 தேவர்களையும் மிகத்தெளிவாக காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்போடியா நாட்டு தேசியக்கொடி ...
Do you know, which one is the World Biggest Temple ?




Comments
Post a Comment