நன்றி: மாலினி ஷ்ரவன் அவர்கள். இது வரை உங்கள் அருகாமையில், கண்காணிப்பில் இருந்த ஒரு பெண்ணை ஆயிரம், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உறவினர்கள் யாருமே இல்லாத, புதிய கலாச்சாரம், பண்பாடு, மக்கள், நடைமுறைகளுள்ள ஒரு ஊருக்கு அனுப்பி வைக்க முன் பெற்றோராகிய உங்களுக்கு எனது சில கேள்விகள்: 1) வெளிநாடு போய்த் தான் படிக்க வேண்டுமா? இதே கல்லூரியில் தபாலில் படிக்கும் முறை இல்லையா? 2) படிப்பதற்காக அனுப்பும் உங்கள் மகளுக்குத் தொடர்ந்து பண உதவி செய்யும் அளவுக்கு அல்லது அவசரமான நேரங்களில் பண உதவி செய்யும் அளவுக்கு உங்கள் பொருளாதார நிலைமை உள்ளதா? 3) இன்னொரு நாட்டுக்கு லட்சக் கணக்கில் பணம் செலவழித்து நல்ல விதமாகப் படித்து முடிக்கும் அளவுக்கு உங்கள் மகளுக்குத் திறமை உள்ளதா? 4) பக்கத்து வீட்டுப் பெண் அமெரிக்காவிற்குப் படிக்கப் போகின்றாள் , சித்தி பெண் லண்டனுக்குப் படிக்கப் போகின்றாள். எனவே என் பெண்ணும் வெளிநாட்டில் படிக்கப் போக வேண்டும் என்றதை விடுத்து உண்மையிலேயே வெளிநாட்டுப் படிப்பு உங்கள் பெண்ணிற்குத் தேவையா? 5) உங்கள் பெண் படித்து முடித்துத் திரும்பி வரும் நிலையில் அவள...

