Skip to main content

தனக்கு மிஞ்சித் தான் தானமும், தர்மமும் - உண்மை அர்த்தம் என்ன - மகா பெரியவா விளக்கம் .

தனக்கு மிஞ்சித் தான் தானமும், தர்மமும் - உண்மை அர்த்தம் என்ன - மகா பெரியவா விளக்கம் .

ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...

தனக்கு மிஞ்சித் தான் தானமும், தர்மமும் என்ற சொல்லுக்கு உண்டான அர்த்தத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று காஞ்சி மகா பெரியவா கூறிய அற்புத கருத்தை அப்படியே இங்கு பகிர்ந்துள்ளோம். இது இந்த 'சிறியவன்' கட்டுரை அல்ல.

தனக்குத் மிஞ்சித் தர்மம்என்பதற்கு நான் புது வியாக்யானம் செய்கிறேன்: எது உயிர் வாழ்வதற்கு அத்யாவச்யமோ, எதெல்லாம் இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாதோ, அந்த அடிப்படைத் தேவைகளுக்குத் தேவையானதைத் தான்தனக்குஎன்று இங்கே சொல்லியிருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால், ‘தனக்குஎன்று சொல்லிக்கொண்டு, ஆடம்பரச் செலவுகள் பண்ணிக் கொண்டே போய் எத்தனை வருமானம் வந்தாலும் தானம் பண்ண ஒன்றுமே இல்லாமல் ஆக்கிக் கொள்வதாகத்தான் முடியும். ஸொந்தச் செலவுகளை அவசியத்திற்கு அதிகமாக எவரும் வைத்துக்கொள்ளாவிட்டால் தான் தனக்கு மிஞ்சிக் கையில் தர்மத்துக்குப் பணமே இருக்கும். முடிவில்லாமல் தனக்கென்று ஆடம்பர போக்யங்களை (Luxuries)ப் பெருக்கிக் கொண்டே போய்விட்டு, ”தனக்கு மிஞ்சித் தர்மம் பண்ண எதுவுமே இல்லைஎன்று கைவிரித்தால் அது நியாயமில்லை.

தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிப்பதுதான்தனக்கு மிஞ்சித் தர்மம்”. ”தர்மம் பண்ணியே ஆகவேண்டுமே !

வேதத்தில்தர்மம் சரஎன்றும், படிப்பு ஆரம்பத்திலேயே அவ்வைஅறம் செய விரும்புஎன்றும் சொல்லியிருப்பதைச் செய்தேயாக வேண்டுமே! ஆனதால், நமக்கு வரும்படி எவ்வளவு குறைச்சலாயிருந்தாலும் அதற்குள் தர்மம் பண்ணும்படியாகவும் செலவைக் கட்டுப்படுத்திக்கொண்டுதனக்கு மிஞ்சும்படிப் பண்ண வேண்டும்என்றே இந்த வசனத்தை அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்* அப்படிச் செய்தால் எவனுமே தர்மத்துக்காகச் சேமித்துத்தான் ஆகவேண்டும் என்றாகும். அதாவது, எவனுமே கடன்படமாட்டான்! இது ஒரு பெரிய ஸ்வய உபகாரம்!

இந்த உணர்ச்சி வந்து விட்டால்பரோபகாரம் என்பது ஈச்வரனின் கட்டளையான கடன் என்று புரிந்து கொண்டு விட்டால்நாம் எத்தனை கஷ்ட தசையிலிருந்தாலும் பரோபகாரத்தை விட்டுவிடாமல் செய்வோம்.

தனக்கு மிஞ்சி தர்மம் என்றுதானே சொல்லியிருக்கு? நீயே ச்ரம தசையிலிருக்கிறபோது மற்றவர்களுக்காக வேறு ஏன் ச்ரமப்படுகிறாய்?” என்று கேட்கத்தான் கேட்பார்கள்.

அப்போது, ”நான் ச்ரம தசையில் இருக்கிறேன் என்றால் பூர்வ ஜன்மாவில் ஈச்வராக்ஞைகளை ஸரியாகப் பண்ணாததற்கு இது தண்டனை என்றே அர்த்தம். போன ஜன்மத்தில் நான் பிறத்தியாருக்கு எந்த உபகாரமும், தொண்டும் பண்ணாததால் இப்போது கஷ்டப்படுகிறேன்.

அதனாலேயே இப்போதுதான் நிச்சயமாக நான் பரோபகாரம் செய்தாக வேண்டும். தனக்கு மிஞ்சிபோன ஜன்மாவின் [கர்ம] பாக்கியாக, அப்போதைய உடம்பு போன பிறகும் மிஞ்சிஇப்போது வந்து சேர்ந்திருக்கும் இந்தக் கஷ்டம்தான், ‘தனக்கு மிஞ்சி’.   இது தீருவதற்காகவே தர்மம் செய்தாக வேண்டும். அதுதான்தனக்கு மிஞ்சி தர்மம்’. நீர் அதற்கு வேறேதோ தப்பர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறீர். இப்போது நான் தன்னையும் மிஞ்சிஅதாவது என் சொந்தக் கஷ்டத்தையும் மிஞ்சிதர்மம் பண்ணினால்தான் வருங்காலத்திலாவது நன்றாயிருப்பேன்என்று பதில் சொல்ல வேண்டும்.

எத்தனையோ கஷ்டத்திலும் இளையான்குடி மாற நாயனாரைப் போலப் பரோபகாரம் பண்ணினவர்களின் நினனவு நமக்கு வரவேண்டும்.

தான் எத்தனை கஷ்டப்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் அதற்கு மேம்பட்டு வெளியிலே வருவதுதான் தனக்கு மிஞ்சுவது. இப்படி வந்து லோகத்துக்கு உபகரிப்பதுதான்தனக்கு மிஞ்சி தர்மம்என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவர் அவருக்கு கீழ்ப்பட்ட நிலையில் இருக்கும் பிறருக்கு திரவிய ஸஹாயம் செய்வதற்காகவே, தான் மிச்சம் பிடிக்கும் விதத்தில் வரவுக்குள் செலவை அடக்கி, கடன் இல்லாமல் சிக்கனமாக வாழவேண்டும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

...இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post) 

இதோ இங்கு கிளிக் செய்யுங்கள்... 

...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

இதோ இங்கு கிளிக் செய்யுங்கள்... 

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.

#KanchiMahaPeriyava
#Periyava
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ஒருதுளிஆன்மீகம்
#ota 

Protected by Copyscape 

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status