Skip to main content

கா...கா...அப்படின்னா என்ன அர்த்தம்? காஞ்சி பெரியவா விளக்கம் ...

தை அமாவாசை ஸ்பெஷல் !

காஞ்சி மகான் அருளுரை...

பித்ருக்கள் எல்லாரும் காக்கா ஸ்வரூபமா வருவதாக ஐதீகம்...

ஒரு பக்தையுடைய கவலை மிகவும் வினோதமாக இருந்தது.

"காக்கை உபத்திரவம் தாங்க முடியல்லே. தெருவில் போகும் போது, தலையில் வந்து உட்கார்ந்து கொள்கிறது. தினமும் இப்படி நடக்கிறது, வேதனையாய் இருக்கிறது” என்றார்.

பெரியவா மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.

“ஒரு பெண் கல்யாணத்துக்கு இருக்கா... ரெண்டு பசங்கள் படிச்சிண்டிருக்கா. அநாதயா போயிடுமோன்னு கவலையா இருக்கு....”

பெரியவா சொன்னார்கள்... 

“தினமும் காக்கைக்கு சாதம் போடனும்... தினமும் நல்லெண்ணெய் விளக்கு போடனும்... சனிக்கிழமையன்னிக்கு சிவன் கோவிலுக்குப் போய் தரிசனம் பண்ணனும்...”

நிம்மதியாகச் சென்று விட்டார் அம்மையார். பிறகு தொண்டர்களிடம் பெரியவா விஸ்தாரமாகப் பேசினார்கள்.

நம்ம மடத்துக்கு யானை, பசு, பூனை, சில சமயம் நாய், பெருச்சாளி, எலி, குருவி, குரங்குன்னு இல்லப் பிராணியும் வருது. ஆனால், காகம் மட்டும் வரதில்லை... அதற்கு பாணாம்பட்டு கண்ணன் என்ற தொண்டர் சொன்னார், “பெரியவா பரமேசுவர ஸ்வரூபம். அதனால், சனீஸ்வரனுக்கு மடத்துக்குள்ளே நுழையக் கூட பயம்... தன் வாகனத்தைக் கூட அனுப்பறதில்லை...”

பெரியவா புன்முறுவல் பூத்தார்கள். பிறகு சொன்னார்கள் “அகத்திலே காக்கைக்குச் சாதம் போடுகிறபோது - காக்காய்...காக்காய்.. காகம், காகம்.. வா, வா -ன்னு கூப்பிடறதில்லை. அப்படித்தானே...

”ஆமாம்”

“என்ன சொல்றா?” - (பெரியவா)

“கா... கா.. ங்கிறா"...

அப்படின்னா என்ன அர்த்தம்? (பெரியவா)

எல்லோரும் விழித்தார்கள்.

“காக்கா... சாப்பிட வா-ன்னு அர்த்தம்...” என்று ஒரு தொண்டர் கூறினார்.

‘அதுதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கே !   வேற விசேஷ அர்த்தம் உண்டான்னு கேட்டேன்.’  (பெரியவா)

எல்லாரும் மெளனமாக நின்றார்கள்.

“கா...கா...ன்னா.. காப்பாற்று, காப்பாற்றுன்னு அர்த்தம்.. பித்ருக்கள் எல்லாரும் காக்கா ஸ்வரூபமா வருவதாக ஐதீகம். “கா...கா....ன்னா - பித்ருக்களே... எங்களை ரட்சியுங்கள்” என்று அர்த்தம் சொல்லலாமில்லையா?”

தொண்டர்கள் பிரமித்தார்கள்.

"அது மட்டுமில்லை. பகவான் எல்லா ஜந்துக்களிடமும் ஆத்மாவா இருக்கான். காக்கையிடமும் அப்படித்தான். பகவானுக்கு நைவேத்யம் பண்ணினால், அவன் சாப்பிடுவதை நம்மால் பார்க்க முடியல. அவனே காகமாக வந்து, நாம் போட்ட சாதத்தைச் சாப்பிடுவதைப் பார்க்க முடிகிறது". ஏதோ ஒரு ஜீவன்... வினைப் பயனாக, காக்கையாப் பொறந்திருக்கு.

அந்த ஜீவனுக்கு - நமக்குள் இருக்குற அதே ஆத்மாவுக்கு - ஸ்வரூபம் வேறே - சாதம் போடுகிறோம். இது, அத்வைதம் தானே???

அத்வைதம் இவ்வளவு எளிதா? அத்வைதம் ஆசிரமங்களில் மட்டும் இல்லை, அடுப்பங்கரையிலும் இருக்கிறது.

பெரியவாள் வாழும் (வாழ்ந்த)  காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?

காமகோடி தரிசனம்..

காணக் காணப் புண்ணியம்..


...ஹர ஹர சங்கர..ஜெய ஜெய சங்கர..

...ஹர ஹர சங்கர..ஜெய ஜெய சங்கர...

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து


...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி 


#Aadi_Amavasai
#Maha_Periyava
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha

Comments

Post a Comment