Skip to main content

நெல்லிக்காய் பற்றி அறியாத பல அரிய தகவல்கள் ...


நெல்லிக்காய் = செவிலித்தாய் !!! 
மருந்துப்பொருள்களில் தாயாராகும் வாய்ப்புக் கடுக்காய்க்கும், செவிலித்தாயாகும் வாய்ப்பு நெல்லிக்காய்க்கும் உண்டு. கடுக்காயை தசமாதா ஹரீதகீ என்றும், நெல்லிக்காயை தாத்ரீ என்றும் அழைப்பர். இரண்டிற்கும் பலவகைகளில் ஒற்றுமை உண்டு. இரண்டும் உப்புசுவை தவிர மற்ற ஐந்து சுவைகள் உள்ளவை. கடுக்காய் கிடைக்காவிடத்திலும் கடுக்காயைப் பயன்படுத்தமுடியாமல் ஆனால் அதே குணமுள்ள பொருள் ஒன்றைப் பயன்படுத்த வேண்டியவிடத்திலும் நெல்லிக்காயை உபயோகிக்கலாம்


ஹரீதகீம் பஞ்சரஸாமுஷ்ணாமலவணாம் சிவாம் 
தோஷானுலோமனீம் லக்வீம் வித்யாத் தீபனபாசனீம் 
ஆயுஷ்யாம் பௌஷ்டிகாம் தந்யாம் வயஸஸ்தாபனீம் பராம் 
யாந்யுக்தானி ஹரீதக்யா வீர்யஸ்யது விபர்யய:
என்கிறார் சரகர்.
தாய் உதவமுடியாத நிலையில் செவிலித்தாய் உதவுவதுபோல கடுக்காய் (மாதா) உதவமுடியாத நிலையில் உணவாகவும் மருந்தாகவும் நெல்லிக்காய் (தாத்ரீ) பயன்படுகிறது. திரிபலை என்ற முக்கனிக் கூட்டில் இவ்விரண்டிற்குமே இடமுண்டு. மூன்றாவது தான்றிக்காய். கடுக்காய் உஷ்ண வீர்யமுள்ளது. நெல்லிக்காய் சீதவீர்யமுள்ளது. இது ஒன்றே மாறுதல். இறைவன் ஒரே குணமுள்ள இரு பொருள்களைத்தான் படைப்பதில்லையே!
கடுக்காயையும் நெல்லிக்காயையும் மற்றோர் ஒற்றுமை பெயரளவிலும் செயலளவிலும் தொடர்கிறதுவயஸ் ஸ்தா என்ற பெயர் இரண்டுக்கும் பொது. வயதை நிலைநிறுத்தும் பொருள் எனப்பெயர். நமது நடத்தை உணவு முதலியவைகளால் ஆண்டிற்கு ஒரு வயது என்ற வரையை நீட்டி இரண்டாண்டிற்கு ஒரு வயது என்றபடி வயதால் குறிக்கப்படும் தேய்வைக் குறைத்துக்கொள்ளலாம். கட்டுப்பாட்டுக்குட்பட்ட வாழ்க்கை முறையுள்ளவர்களது தோற்றம் வயதைக் குறைத்துக் காண்பிக்கும். கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையுள்ளவர்களுக்கு ஆன வயதைவிட அதிக வயது வாழ்ந்த தோற்றம் காணும். சரீர மன ஆரோக்கியத்தைச் செவ்வனே பாதுகாப்பதால், வயதை நிலைநிறுத்துபவையாக வயஸ் ஸ்தாபனங்களாகக் கடுக்காயும் நெல்லிக்காயும் புகழப்படுகின்றன


புளிப்பு தூக்கலாகவும், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, உரைப்பு சற்றுத் தாழ்ந்தும் உள்ளது. எளிதில் ஜீர்ணமாகக் கூடியது (லகு) வரட்சி தரக்கூடியது (ரூக்ஷம்) குளிர்ச்சி தரக்கூடியது (சீதம்). 

ஜலத்தின் இயற்கைச்சுவை இனிப்பு. சுவையறியும் புலனாகிய நாக்கில் இந்த இயற்கைச் சுவையை  அறியும் ஸூக்ஷ்மம் போதாதென்பர். ஆகவே அவ்யக்த மதுரம் என்று புலப்படாத இனிப்பென ஜலத்தின் சுவையை ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

இந்த புலப்படாத இனிப்பையும் அறியும் திறமையை நெல்லிக்காய் தருகிறது. நெல்லிக்காயை வாயிலிட்டுச் சுவைத்தவுடன் மேல் ஜலம் பருகக் கற்கண்டாக இனிக்கும். சிறுவர்கள் இதைப் பரீக்ஷிக்க அடிக்கடி நெல்லிக்காயைச் சுவைப்பதும், ஜலம் பருகுவதுமாக இருந்து பின் தொண்டைக்கட்டு, சளிவேக்காளம் முதலியவைகளுக்கு உள்ளாவது உண்டு. நெல்லிக் காயின் சீதள குணமும் குளிர்ந்து இனிக்கும் ஜலத்தின் கபத்தை வளர்க்கும் சக்தியும் இந்நிலையைப் பலவீனமானவர்களிடம் ஏற்படுத்துவிடுகிறது.
கிணற்று நீர் கடுப்பாக வாய்க்கு வழங்காதிருக்கும்போது புதிதாகக் கிணறு வெட்டுபவர்கள் நெல்லிக்கட்டையிலான வட்டவடிவமுள்ள ஆதாரத்தின் பேரில் கிணற்றின் சுற்றுச் சுவரை எழுப்புவார்கள். பக்கவாட்டு ஊற்றுகளிலிருந்து சுரக்கும் ஜலம் இதன் வழியே பாய்வதால் ஜலத்தின் கடுப்பைக் குறைப்பதும் நாக்கின் சுவை உணர் திறனைக் கூராக்குவதும் நெல்லிக்காயின் தனிப்பட்ட சக்தி

நெல்லிக்காய் சிறந்த ரஸாயனப் பொருள். சரகர் ரஸாயன அதிகாரத்தில் பெரும்பகுதியை நெல்லிக்காயின் முறைகளை விளக்கவே பயன்படுத்தியிருக்கிறார். சியவனப்ராசம் என்ற சிறப்புவாய்ந்த ரஸாயனத்திற்கு இதுவே தாய்ச் சரக்கு. விட்டமின் சி யை அதிக அளவில் உபயோகிக்கத் தோலில் திட்டு திட்டாக வெண்குஷ்டம் போன்ற வெளுப்பு ஏற்படக்கூடும் என்று சமீபத்தில் ஓர் ஆராய்ச்சி நிபுணர் கூறியுள்ளார். தோலின் நிறத்தைப் பாதுகாக்கும் மை போன்ற பொருளை விட்டமின் சி கரைத்துவிடக் கூடும். இது ஓரளவு செயற்கை விட்டமின் விஷயத்தில்தான் பொருந்தும். இயற்தையாக விட்டமின்  ஸி உள்ள உணவுப் பொருள்களை எத்தனை அதிகம் உபயோகப்படுத்தினாலும் இந்நோய் ஏற்படாது. அதிலும் நெல்லிக்காய் இந்நோய்வராமல் தடுப்பதில் நல்ல சக்திவாந்ததென ஆயுர்வேதம் கூறுகிறது


ஆரோக்கியமுள்ளவன் தினமும் உஷவில் நெல்லிக்காயையோ ஏதேனும் ஒருவகையில் சேர்த்துவர ஆரோக்கியம் நன்கு ஸ்திரப்பட்டு நிற்கும். அதில் உள்ள புளிப்பு வாயுவைக் கண்டித்து அளவுக்கு மீறவிடாது. அதன் இனிப்பும் சீதவீர்யமும் பித்தத்தைத் தன்னிலையில் பாதுகாப்பதால் ஆரோக்கியம் கெடாமல் பாதுகாக்க முடிகிறது. கடுக்காயிலும் இதே சிறப்புக் குணங்களுண்டு. கடுக்காய் வீர்யத்தில் உஷ்ணம். இது சீதம் என்பதே மாறுதல். இதிலுள்ள சீதம் இரவில் தனித்து உபயோகிப்பதற்கு இடையூறாகிறது


ஆகவே நெல்லிக்காயை உணவுப் பொருளாக இரவில் (ஊறுகாயாகவோ, துவையலாகவோ, பச்சடியாகவோ) உபயோகிப்பதில்லை. பகற்போதில் மாத்திரம் உபயோகிக்கத் தக்கதென்பதுதான் இதைக் கடுக்காய்க்குச் செவிலியாக்கக் காரணம். உபவாஸமிருந்த மறுநாள் காலையில் பாரணைக்கு இதைச் சேர்ப்பது, உபவாஸத்தால் ஏற்படும் இரைப்பைக் குடலழற்சியை மாற்றவும் பித்தச் சேர்க்கையை அகற்றவும் பயன்படுகிறது


தயிரைத் தனித்து நெடுங்காலம் உண்பதால் சில கெடுதல்கள் ஏற்படும். ஆனால் அவை நெல்லிக்காயுடன் சேர்த்து உண்ணும்போது ஏற்படுவதில்லை என்கிறது ஆயுர்வேதம். நல்ல ருசி தரும் பொருள் என்பதை ஜலத்திற்கு இனிப்புச் சுவை கூட்டுவதாலேயே அறிந்திருப்போம். ஆகவே, உணவில் வெறுப்புசுவை உணர்ச்சிக் குறைவாலோ, வெகுட்டலாலோ, அஜீர்ணத்தாலோ ஏற்பட்டிருப்பின் அதை மாற்றி ருசி பசி ஜீர்ணசக்தி அளிக்கவல்லது. மலத்தை இறுக விடாமல் இளக்கி வெளியேற்றும். குடலிலும் குழாய்களிலும் ஏற்படும் அடைப்பு பூச்சு இவைகளைப் போக்கும். சுவாஸகோசத்திற்கும் ஹிருதயத்திற்கும் மூளைக்கும் பலம் தரும். ஞாபக சக்தி, கடும் உழைப்பிலும் களைக்காத திடம், மென்மையான தொண்டை, தோலின் மென்மை, புஷ்டி இவைகளைத் தரவல்லது. வாய் நீர் சுரப்பு, வாந்தி, தலைசுற்றல், மலபந்தம், உட்சூடு, வெட்டை படுதல், உள்ளெரிவு, தாதுக்ஷயம் இவைகளைப் போன்ற உடலுறுப்புகளின் தளர்ச்சியையும் வேக்காளத்தையும் உணர்த்தும் நிலைகளில் ஏற்றது



துவையல், ஊறுகாய், பச்சடி, முரப்பா, தேன் ஊறல் ஆகத் தயாரித்து உபயோகிக்கலாம். புளிக்குப் பதில் நெல்லிக்காயை அரைத்துக் கலக்கி ரஸம் வைத்து உபயோகிக்கலாம். இயற்கையில் வருஷத்தில் 2-3 மாத காலமே கிடைக்கக்கூடிய நெல்லிக்காய்களை வருஷம் முழுவதும் உபயோகிக்கத் தக்கதாக்க அதை வெயிலிலுலர்த்தி வற்றலாக்கிக் கொள்வதும், முரப்பா, தேன் ஊறலாக்கிக்கொள்வதும் தான் வழி, அப்படியே காயவைத்து வற்றலாக்கிக் கொள்வதை விட முற்றிய நெல்லிக்காய்களைப் பொறுக்கி நல்ல ஈயம் பூசிய பாத்திரத்தில் போட்டு நெல்லிக்காய் முழுகுமளவிற்கு ஜலம் சேர்த்து அடுப்பில் ஏற்றி நன்கு ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆறியதும் உருக்குலையாமல் சுளை சுளையாக அவைகளைப் பிரித்து விதைகளை அகற்றி மூங்கில் தட்டுகளில் பரப்பி உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ளலாம். வெண்மையாயிருப்பதால் பால் முள்ளி என்று இதற்குப் பெயர். ருசி, நிறம், மணம், குணம் இவைகளில் பெருமளவில் பச்சை நெல்லிக்காயை ஒத்திருக்கும்



தேன் நெல்லிக்காய் – நன்கு முற்றிய நெல்லிக்காய்களை அலம்பி மேல் ஈரத்தைத் துடைத்துவிட்டு ஒரு வெள்ளி அல்லது எவர்ஸில்வர் கம்பி, அல்லது நீண்ட கருவேலம்முள் அல்லது திடமான தென்னை ஈர்க்கு இவைகளில் ஒன்றால் நெல்லிக்காய்களில் 10-15 குத்து குத்தி ஒரு பீங்கான் ஜாடியிலிடவும். பிறகு நெல்லிக்காய்கள் நிரம்புமளவிற்குத் தேன் நிரம்பி மூடிவைக்கவும். (தேனிற்குப்பதில் நல்ல கெட்டியான சர்க்கரைப்பாகையும் ஊற்றி வைப்பதுண்டு). 

தினம் 3,4 மணி நேரம் மூடியை அகற்றிச் சுத்தமான மெல்லிய துணியால் வேடுகட்டி, வெயிலில் வைத்திருக்கவும். இவ்விதம்15 நாட்கள் செய்ததும் ஜாடியை நன்கு மூடி ஈரக்கசிவு இல்லாததும், எறும்பு தீண்டக்கூடாததுமான இடத்தில் பத்திரப்படுத்திக்கொள்ளவும். நன்கு ஊறியதும் ஈரப்பசையற்ற சுத்தமான ஸ்பூன் உதவிகொண்டு கொட்டைகளை அகற்றிவிடலாம். இதைத் தினமும் காலையில் 1,2 நெல்லிக்காய் சாப்பிட்டுவர நல்ல பலம், புஷ்டி, பசி, மனத்தெளிவு, சுறுசுறுப்பு உண்டாகும்



நெல்லிக்காயைச் சாறு பிழிந்து சர்க்கரையோ கற்கண்டோ சேர்த்து பாகாக்கிக்கொள்ளலாம். இதற்கு நெல்லிக்காய்ச் சாறு 1 லிட்டர், கற்கண்டு அல்லது சர்க்கரை அல்லது குழைவு ஜீனி ஒரு கிலோ இரண்டையும் கலந்து மைசூர்பாகு பதத்திற்கு வரும்வரை பாகாக்கி இறக்கி ஏலம் 2 கிராம் தூளாக்கி அதில் போட்டுக் கிளறி ஈயம் பூசிய தட்டிலோ, பீங்கான் தட்டிலோ கொட்டி ஆறியதும் வில்லைகளாக்கிக் கொள்ளலாம். தலையிலும் மார்பிலும் வலியுடன் கொதிப்பு உணரப்படும்போது சாப்பிட மிகவும் ஏற்றது


ஆமலகரஸாயனம் – பால் முள்ளியாகத் தயாரித்த நெல்லிமுள்ளியின் சூர்ணம் 100 கிராம் எடுத்துப் பீங்கான் பாத்திரத்திலிட்டு அதில் முற்றிய நெல்லிக்காயின் சாறு பிழிந்து நெல்லி முள்ளிச்சூர்ணம் குழம்பாக ஆகும்வரை சேர்த்துப்பிறகு உலர்த்திவிடவும். (200 மில்லி லிட்டர் திரவம் இருந்தால் போதுமானது.) இப்படி 15 – 30 நாள்வரை தினமும் காலையில் புதிது புதிதாகச் சாறு சேர்த்து மாலைக்குள் அந்தச் சாறு சுண்டுமளவிற்கு வெயிலில் வைத்து மறுபடியும் மறுநாள் காலை சாறு சேர்க்கவும். இவ்விதம் 15 அல்லது 20 நாட்கள் செய்ததும் உலர்த்திச் சம அளவு குழைவு ஜீனி சேர்த்து வைத்துக்கொள்ளவும். இதில் காலையில் ½ - 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு மேல் சூடான பசுவின் பால் சாப்பிட உடல் களைப்பு அயர்வு நீங்கி சுறுசுறுப்புடனிருக்கும். மூளை வேலை உள்ளவர்களுக்கும் பாலர்களுக்கும் வயதானவர்களுக்கும் மிகவும் ஏற்றது

இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் உடலில் சேர இது மிகவும் உதவும். இரும்புசுண்ணாம்பு சத்துள்ள மருந்துகள் சாப்பிடும்போது இதையும் உணவாகக்கூடச் சேர்ப்பதோ லேகியம், சூர்ணம், தேன் ஊறல் முதலிய ஏதேனும் ஒரு பாகமுறையில் தயார்செய்து சேர்ப்பதோ மிக நல்லது நெல்லிக்காய்ச் சாறு சேர்த்துத் தயாரித்த அயபஸ்மமும், பவழம், முத்துச்சிப்பி, மான்கொம்பு இவைகளின் பஸ்மமும் நல்ல ரஸாயனமாகின்றன. ஆமலகரஸாயனம், சியவனப்ராசம், தாத்ரீ கிருதம், கனகாரிஷ்டம் முதலிய மருந்துகள் நெல்லிக்காய் அதிகம் சேர்ந்துள்ள மருந்துகள். இவை வைத்தியர்களாலேயோ பெருத்த மருந்து உற்பத்திசாலைகளாலோ தயாரிக்கத் தக்கவை. நெல்லிக்காய் சாறு சேர்த்த தைலங்கள் கோடையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க மிகவும் ஏற்றவை

தலைக்குப் பற்று – தலையில் நீர்கோர்வையோ கனமோ இன்றி ஏற்படும் கடும் தாபஜ்வரம் அல்லது நல்ல வெயிலில் அலைந்துவிட்டு வந்ததும் ஏற்படும் கொதிப்புத் தலைவலி, ரத்தக் கொதிப்பில் ஏற்படும் தலைசுற்றுதல், தலைவலி, கிறுகிறுப்பு இவைகளில் நெல்லிமுள்ளிப்பற்று மிக நல்லது. நெல்லிமுள்ளியைப் பாலிலோ ஜலத்திலோ சிறிதுநேரம் ஊறவைத்து அரைத்துப் புளியங்கொட்டைகனம் நெற்றியில் பற்றுப் போட உடன் தலையில் ஏறிய சூடும் கொதிப்பும் அடங்கி வேதனை குறைந்து தூக்கம் வரும். நவச்சாரம் 1-2 சிட்டிகை அல்லது பச்சைக் கற்பூரம் 2-3 அரிசி எடை சேர்ப்பது அதிக குணம் தரும். நீர் சளி இருக்கும்போது இதைப் போடக்கூடாது

அதிக புத்திவேலையுள்ளவர்கள் தினமும் இரவில் தூக்கம் வராமல் திணறுவதுண்டு. பூர்ண ஓய்வு கிடைக்காததால் அவர்களுக்குக் குழப்பமும் தளர்ச்சியும் அதிகம் ஏற்படும். அதைத் தவிர்க்க மாலை வேளைகளில் தலைக்கு லேசாக க்ஷீரபலா தைலத்தைத் தடவிக்கொண்டு அதன்மேல் நெல்லிமுள்ளிப் பற்றைப்போட்டுக்கொண்டு 15-30 நிமிஷங்கள் உட்கார்ந்திருந்து விட்டுப் பிறகு ஸ்னானம் செய்வதால் இரவில் நல்ல தூக்கமும் அதன் பலனாகத் தெளிவும், சுறுசுறுப்பும் ஏற்படும். நெல்லிமுள்ளியை ஊறவைத்தரைத்து லேசாகச் சுடவைத்து அதைத் தலையில் புளியங்கொட்டை கனத்திற்கு அப்பிக்கொள்வது நல்லது. நீர்க்கோர்வை, சளி போன்ற கபக்கோளாறு உள்ளவர்கள் இதைச் செய்து கொள்ளக்கூடாது.



Thanks to Shri. எஸ்.ஸுவாமிநாதன்
டீன்ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

நன்றி...

ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி.

Comments

Popular Posts (அதிகம் வாசிக்கப்பட்டவை)

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்களைத் தந்து ஆத

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே... அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்... அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. கல்லடைப்பு நீங்க... ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக் கருங்கல் சிலையானாலும்

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   பாடல்   இது ... இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல். ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்...  இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்...  முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப்

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - Shiva Thandava Stotram

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்: இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.  ஒருமுறை,  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே  நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.  பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அதில் மனம் குளிர்ந்த சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடி இராவணன

Problems and Solution Temples (பரிகார ஸ்தலங்கள் )

Problems and Solution Temples  (பரிகார ஸ்தலங்கள் ) Marriage Thirumanancheri near Kuttalam On the Mayiladuthurai-Kumbakonam road Travelbase: Kumbakonam Kodumudi Travelbase: Erode Madurai Meenakshi Kanchipuram Ekambareswarar Kanchipuram Kacchabeswarar Thiruverkadu Vedapureeswarar Travelbase: Chennai Thirumazhisai Othandeeswarar Travelbase: Chennai Thiruvidanthai Nithya Kalyana Perumal in East Coast Road Travelbase: Chennai Mylapore Travelbase: Chennai Vedaranyam Travelbase: Thiruveezhimizhalai Travelbase: Thirukkazhipalai 3 kms from Annamalai university, Chidambaram Travelbase: Chidambaram Uppiliyappan koil Travelbase: Kumbakonam Nachiyar Koil Travelbase: Kumbakonam Nachiyar Koil in Trichy Immayil nanmai tharuvar temple at Madurai Piranmalai near Thirupathur Travelbase: Karaikudi Thirukolakudi in Pudukkottai-Kilachevalpatti road Travelbase: Pudukkottai Thiru velvikudi near Kutralam Travelbase: Mayiladuthrai Kuttalam Travelbase: Mayilad

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and phys

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டனாரும், மிகச்சிறந்த ரிஷி முனிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாச தேவரிடம் தனது சந்தேக

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள்)   அவசியம்  பித்ரு தேவதைகளுக்காக  தர்ப்பண

ஏழ்மையை விரட்டி செல்வ வளம் அளிக்கும் "பரம ஏகாதசி" விரத மகிமை.

32 மாதங்களுக்கு ஒருமுறை வரும்  ' பரம ஏகாதசி ' விரதம்  ...  ஏழ்மையை விரட்டும் பரம ஏகாதசி விரத மகிமை ...  நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல் , உபவாஸங்களில் ( விரதங்களில் )  ' ஏகாதசி விரதம் ' என்பது மிக , மிக முக்கியமானதும்   மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட ....  தற்போது   வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி ' ஆகும் . வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும் , 32 மாதங்களுக்கு ஒரு முறை   புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த ' அதிக ' (Adhika)  மாதத்தில் தேய் பிறையில் வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி '  என்று அழைக்கப்படுகின்றது .    இந்த வருடம்   ' அதிக ' மாதம் வந்துள்ளது .  ' அதிக ' (Adhika)  மாதம் , (September/October )   தேய்   பிறையில் ( கிருஷ்ண   பட்சம் )  வரக்கூடிய ஏகாதசியே " பரம   ஏகாதசி "  (Parama Ekadasi)   என்று   அழைக்கப்   படுகின்றது .  பரம   ஏகாதசி   பற்றி ' ஸ்காந்த