Skip to main content

தமிழ் புத்தாண்டு பலன்கள் (14-04-2014 முதல் 13-04-2015 வரை) - மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம்:


 தமிழ் புத்தாண்டு பலன்கள்: பகுதி 1 / 3 

நன்றி: தினமலர் 


மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம்: 

மேஷம்: 
(அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) போகப் போக நன்மை! - 65/100
சூரியனை உச்சமாக கொண்ட மேஷ ராசி அன்பர்களே

செவ்வாயே உங்கள் ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு, முக்கிய கிரகம் எதுவுமே சாதகமாக அமையவில்லை. அதனால், எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையளிக்கும். ஆண்டுதொடக்கம் சுமாராக இருந்தாலும், நாட்கள்போகப் போக நன்மை அதிகரிக்கும். முக்கிய கிரகமான குருபகவான் 3-ம் இடமான மிதுனத்தில்இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. குருசாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வை பலன் நன்மை தரும். ஜூன் 13-ந் தேதி குருமிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார்.அங்கும் அவரால் நன்மை தர இயலாது.ராகு தற்போது 7-ம் இடமான துலாமில்இருக்கிறார். இதனால் வீட்டில் சில சிரமம் உருவாகும். ஆனால் ஜூன்21ல் ராகு துலாமில் இருந்து கன்னிற்கு மாறுகிறார். அவரால் நன்மை கிடைக்க ஆரம்பிக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் தீரும். முயற்சியில் இருந்து வந்த தடை அனைத்தும் விலகும்.கேது உங்கள் ராசியிலேயே இருப்பதால்எதிரி தொல்லை ஏற்பட்டுக் கொண்டிருக்கும். அவர் ஜூன் 21ல் மேஷத்தில் இருந்து மீனத்திற்குமாறுகிறார்.இதுவும் சிறப்பானதல்ல.சனி உங்கள் ராசிக்கு 7-ம் இடமானதுலாமில் உள்ளார். பொதுவாக இங்கு இருக்கும் போது சனி குடும்பத்தில் பல பிரச்னையை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும். ஆனால், தற்போது சனி வக்கிரமாக உள்ளதால் கெடுபலன் நேராது. மாறாக, நன்மை ஓரளவு கிடைக்கும். டிச. 16ல் சனி துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார். அஷ்டமத்தில் சனி பெயர்வதால், முயற்சியில் பல்வேறு தடை உருவாகும். பணப்புழக்கம் இருக்கும். அதே நேரம் செலவும் அதிகரிக்கும். சிக்கனம் தேவை.குருவின் பார்வையால் பொருளாதாரம் சீராகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வீடு, மனை வாங்கலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் போன்ற சுபங்கள்கைகூடும். குழந்தை பாக்கியம் பெறுவர். ஜூலை மாதம் முதல் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிதடை படலாம். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் இல்லை. உறவினர் வகையில்தொடர்ந்து அனுகூலம் இருக்காது.

தொழில், வியாபாரம்தொழில், வியாபாரம் சிறப்பாகநடக்கும். எதிரித் தொல்லை சற்று கட்டுக்குள்இருக்கும். ஆண்டின் முற்பகுதியில், அரசு வகையில் நன்மை கிடைக்கும். ஜூன்13-ந் தேதிக்கு பிறகு வியாபாரத்தில் முயற்சி தேவைப்படும். ஆண்டின் பிற்பகுதியில் அரசு வகையில் நன்மை உண்டாகாது.வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக்கொள்ளவும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். ஜூன் 21-ந் தேதிக்குபிறகு எடுத்தகாரியத்தில் வெற்றி உண்டாகும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும்.

பணியாளர்கள்:   வேலைப்பளு அதிகரிக்கும். சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். போலீஸ் மற்றும்பாதுகாப்பு துறையில் இருப்பவர்கள்முன்னேற்றம் காண்பர். முக்கிய கோரிக்கைகளை ஜூனுக்குள் கேட்டு பெற்றுக் கொள்ளவும்.அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அதேபோல் வேலை இன்றி இருப்பவர்கள் ஆண்டின்தொடக்கத்திலேயே முயற்சிசெய்து வேலையை தேடிக் கொள்வது நல்லது.

கலைஞர்கள்ஒப்பந்தம் கிடைக்க சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். திறமை வெளிப்படுவதோடு, சமூகத்தில் புகழ், செல்வாக்கிற்குகுறைவிருக்காது.அரசியல்வாதிகள்: சீரான நிலையில் இருப்பர். ஜூன் முதல் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காது. பலனை எதிர்பாராமல் பிறருக்கு உழைக்க வேண்டியதிருக்கும்

மாணவர்கள்: ஆண்டு முழுவதும் சீரான பலனைக் காணலாம். சற்று முயற்சி எடுத்தால் சிறப்பான வெற்றி கிடைக்கும். ஆனால் அடுத்தகல்வி ஆண்டில் சுமாரான பலனே உண்டாகும். விடாமுயற்சியுடன் படிக்க வேண்டியதிருக்கும்.விவசாயிகள்: செலவு அதிகரிக்கும் பயிர் வகைகளைத் தவிர்க்கவும்.அக்கறையுடன் உழைப்பதுஅவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகபலன் இருக்காது.

பெண்கள்:   குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியை பெறுவர். உடல் நலம் சிறப்பாக இருக்கும். கண் தொடர்பான உபாதை உண்டாகலாம்.

ரிஷபம் :

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிஷம் 1,2) தோஷம் நீங்கும்! - 70/100

சுக்கிரனை ஆட்சிவீடாகக் கொண்டரிஷபராசி அன்பர்களே!

தற்போது ராகு 6-ம் இடத்தில் இருப்பதால்பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். செயல்பாடுகளில் வெற்றி தந்து உங்கள் திறமையை வளர்ப்பார். ஜூன்21ல், இவர் கன்னி ராசிக்குசெல்கிறார். 5-ம் இடமான அங்கு அவரால்நன்மை தர இயலாது. அவரால் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் உருவாகலாம்.கேது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருப்பதால், உடல் நலத்தில் சிற்சில உபாதைகளை தரலாம். ஆனால் ஜூன் 21ல், அவர் 11-ம் இடமானமீனத்திற்கு செல்கிறார். அங்கு பல்வேறுநன்மைகளைத் தருவார். ஆன்மிக சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு. பணவசதி நன்றாக இருக்கும். தோஷங்கள் நீங்கி நல்வாழ்க்கை நடத்துவதற்குரிய சந்தர்ப்பங்கள் தேடி வரும். நன்மையானகாலகட்டமாக அமையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புத்திரர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்குவர்.சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடமானதுலாமில் இருந்து, உங்களுக்கு எண்ணற்ற பலநன்மைகளை செய்து கொண்டு இருக்கிறார்.குறிப்பாக முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். குடும்பத்தில் உங்களை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருப்பார்கள். டிசம்பர் 16ல், இவர் துலாமில் இருந்துவிருச்சிகத்திற்கு மாறுகிறார்.இது சிறப்பான இடம் அல்ல. அதாவது அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளை உருவாக்குவார். பொறுமை தேவை.

தொழில், வியாபாரம்: வெளியூர்பயணம் அனுகூலத்தைக்கொடுக்கும். புதியதோர் தெம்பும், உற்சாகமும் ஏற்படும். போட்டியாளர்களின்தொல்லைஇருக்காது. அரசிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதியதொழிலைத் தொடங்கலாம். குறிப்பாக ஜூன்13க்குள்ஆரம்பிப்பது நல்லது.பெரிய தொழில் தொடங்க வேண்டுமானால், உங்கள் குடும்பத்தில், நல்ல ராசியில் உள்ளவர்கள் பெயரில்தொடங்குவது நல்லது. இரும்பு, கம்ப்யூட்டர், தரகுஉள்பட எந்த தொழிலிலும்சிறப்பைக் காணலாம்.

பணியாளர்கள்: வேலையில் நல்ல வளர்ச்சி காணலாம். சிலர் அதிகாரம் மிக்க பதவிக்கு உயர்த்தப்படுவர். சம்பள உயர்வு, எதிர்பார்த்ததைவிடஅதிகமாக கிடைக்கும். வெகு நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்குவேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஜூன் 13 குரு பெயர்ச்சி முதல், அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு வேலையில் வெறுப்பு வரலாம், பொறுப்புகளை இழக்கலாம். ஆனால், சனிபகவான் வக்கிரகாலமாக இருப்பதால் இந்த இடர்பாடுகள் எதுவும் நடக்காது. அதோடுகுருவின் பார்வைகளால் நன்மையே நடக்கும்.உங்கள் வேலையை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். நீங்களே செய்து முடிப்பது நல்லது.குருபகவானால் முயற்சியில் சிற்சில தடைகள்வரத்தான் செய்யும்.அதை சாமர்த்தியமாகமுறியடிப்பீர்கள். பொதுவாக கடந்த காலத்தைப் போல் நன்மை கிடைக்காது என்று நினைப்பீர்கள்.ஆனால் உங்கள் நிலைமையை கீழே விழாதவாறு குரு, தன் பார்வைகளால் தாங்கி கொள்வார். பொருளாதாரத்தில் எந்த பின்னடைவும் இருக்காது. உங்கள் செல்வாக்கிலும் எந்த பங்கமும் வராது.அதேநேரம் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கிஇருப்பது நல்லது.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.பண வரவு சிறப்பாக இருக்கும். அரசிடமிருந்து பாராட்டு,வெகுமதி கிடைக்கும்.அரசியல்வாதிகள்: நினைத்ததை நிறைவேற்றிக்கொள்வீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும். ஜூன் 13-ந் தேதிக்கு பிறகு எதிலும்சற்று நிதானம் தேவை.

மாணவர்கள்: கல்வியில் சாதனை படைக்கலாம். அடுத்த கல்விஆண்டில் அதிகமாக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். முயற்சிக்கு தகுந்தமதிப்பெண் கிடைக்கும். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கைத் தேவை.விவசாயிகள்: நல்ல லாபத்தைக் காணலாம்.நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. கருப்புநிற தானியங்கள் சிறப்பானபலனைத் தரும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் புதிய சொத்து வாங்குவீர்கள். வழக்கு விவகாரங்கள் இந்த காலத்தில் சிறப்பாக அமையும். ஆனால் புதிய வழக்கில் சிக்க வேண்டாம்டிசம்பர் 16-ந் தேதிக்கு பிறகு சிற்சில  பிரச்சினையை உருவாகலாம். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம்.

பெண்கள்: புதிய ஆபரணம்வாங்கலாம்.   உல்லாச பயணம்மேற்கொள்வீர்கள்.பிள்ளைகளால் பெருமைகிடைக்கும். உடல்நலம்சீராக இருக்கும்

மிதுனம்  

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) வாகனம் வாங்கலாம்! - 75/100
புதனை ஆட்சி வீடாகக் கொண்ட மிதுனராசி அன்பர்களே!

மதிநுட்பத்துடன் செயலாற்றி வருவீர்கள்.தற்போது 5-ம் இடத்தில் இருக்கும் ராகுவால்குடும்பத்தில் பிரச்னை உருவாகலாம். ஆனால்,குருவின் பார்வை அவர் மீது விழுவதால் கெடுபலன் பெரும்பங்கு குறையும். ஜூன்21ல் ராகு துலாமில் இருந்து கன்னிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம்அல்ல.கேது 11-ம் இடமான மேஷத்தில் இருப்பதால், நல்ல பொருளாதார வளமும், ஆரோக்கியமும்உண்டாகும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலை வழங்குவார். ஜூன்21ல்கேது மேஷத்தில் இருந்து மீனத்திற்கு மாறுகிறார்.அப்போது நன்மை குறையத் தொடங்கும்.சனி பகவான் 5-ம் இடமான துலாம் ராசியில் உள்ளார். அவரால் முயற்சியில் தடை, எதிரி தொல்லை, இடையூறு உருவாகும். தற்போதுசனிபகவான் வக்கிரத்தில் சிக்கி இருப்பதால் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. டிசம்பர் 16ல்இவர் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார். சனி பெயர்ச்சிக்குப் பின், கையில் பணம் புழங்கும். எடுத்த செயலில் வெற்றி உண்டாகும். ஆற்றல்மேம்படும். சனியின் 10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமையும். அதன் மூலம் தொழிலில்நல்ல முன்னேற்றம் ஏற்படும். எந்த தொய்வும்இல்லாமல் தொடர்ந்து சிறப்பானமுன்னேற்றத்தைக் காணலாம். குடும்பத்தில் வசதி அதிகரிக்கும்.சமூகத்தில் உங்கள் செல்வாக்குமேம்படும். அக்கம்பக்கத்தினரின் பாராட்டு கிடைக்கும்.தம்பதியினர் இடையேகருத்துவேறுபாடு நீங்கிஅன்யோன்யம் அதிகரிக்கும். பல ஆண்டுகளாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி ஜூன் 13க்கு பிறகு கைகூடும்.அதுவும் நல்ல வரனாகஅமையும். குழந்தை பாக்கியம் ஏற்படும். புதிய வீடு கட்டலாம். அல்லது தற்போதுள்ளவீட்டை விட அதிக வசதிமிகுந்த வீட்டிற்கு குடிபுகலாம். உறவினர்கள்வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கலாம்.

தொழில், வியாபாரம்: வியாபாரிகள் எதிரிகளின் சதியை முறியடித்து முன்னேறலாம். தீயோர்சேர்க்கையால் அவதிப்பட்டு வந்தவர்கள் அதில் இருந்துவிடுபடுவர். வீண் அலைச்சல் இருக்காது. தரகு தொடர்பான தொழில் நன்கு வளர்ச்சி அடையும். டிசம்பர் 16 முதல், வியாபாரிகள் புதியதோர் தெம்பைக்காணலாம். வருமானம் அதிகரிக்கும். புதியவியாபாரம் நல்ல லாபத்தை கொடுக்கும்.வேலையின்றி இருப்பவர்கள், புதிய தொழிலைத் தொடங்கலாம். அதில் நல்ல வருமானம் கிடைக்கும். சிலர் வேலை விஷயமாக வெளிநாடு சென்று வருவார்கள். வாடிக்கையாளர்கள் உங்களிடம்நன்மதிப்பு வைத்திருப்பர். அரசிடம் எதிர்பார்த்தஉதவிகள் கிடைக்கும்.

பணியாளர்கள்: சிறப்பான முன்னேற்றம் காணலாம். வீண் அலைச்சல் இருக்காது. அப்படியே வெளியூர்பயணம் மேற்கொண்டாலும் அது அனுகூலமான பலனைத்தரும். போலீஸ் மற்றும் பாதுகாப்புதொடர்பான வேலையில் இருப்பவர்கள்முன்னேற்றம் காண்பர். புதிய பதவி வர வாய்ப்பு உண்டு. ஜூன் 13 முதல் பணியில் மேலும்முன்னேற்றம் காணலாம்.வேலையில் திருப்தியும், தன்னம்பிக்கையும் பிறக்கும். வேலைப்பளுவெகுவாக குறையும். விரும்பிய இடத்திற்கு மாற்றம்கிடைக்கப் பெறலாம். படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

கலைஞர்கள்: பிரச்னைகளின்றி முன்னேறலாம்.புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.பணவரவு சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பதவி கிடைக்கச் சில காலம் பொறுத்திருக்க வேண்டும். ஆனால்,பணவிஷயத்தில் தேவைகள் பூர்த்தி அடையும்.மாணவர்கள்இந்த கல்விஆண்டில் சற்று சிரத்தை எடுத்து படித்தும்ஆசிரியர்களின்அறிவுரையையும் ஏற்றால், அடுத்தஆண்டு விரும்பிய பாடம்கிடைக்க உறுதுணையாக இருக்கும்.

விவசாயிகள்: முன்னேற்றமானபலனைக் காணலாம். புதியசொத்துக்களை வாங்கலாம்.மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானத்தைப் பெறலாம்.

பெண்கள்: பணவிஷயத்தில்முன்னேற்றம் அடைவர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். குழந்தைபாக்கியம் உண்டு. விருந்து, விழா என சென்று வரலாம். உடல்நலம் சீராகஇருக்கும். ஜூன் 21க்குப் பிறகு, சிற்சில உபாதைகள்வரலாம். எதிரிகளின் தொல்லைஏற்படும். சிலரது வீட்டில்பொருட்கள்களவு போகவாய்ப்பு உண்டு.

கடகம்  

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வாழ்வில் சுபயோகம்! - 70/100
சந்திரனை ஆட்சிநாயகனாகக் கொண்டகடக ராசி அன்பர்களே!

உங்கள் கையில் எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகி விடும் . பிறரின் அன்பான பேச்சுக்கு அடிபணிவீர்கள். இந்த ஆண்டில் முக்கிய கிரகமான குரு பகவான் 12-ம் இடமான மிதுனத்தில் இருக்கிறார். இது சிறப்பானதல்ல. ஜூன்13ல் குருபகவான் மிதுனத்தில் இருந்து உங்கள் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரால் வீண் விரோதம் வரலாம். மந்த நிலை ஏற்படலாம். ஆனால்,குருவின் பார்வை பலத்தால் நன்மை கிடைக்கும். 5-ம் பார்வையால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பொருளாதார வளம் அதிகரிக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 7-ம்பார்வையால் செல்வாக்கு அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். வாழ்வில் சுபயோகம் உண்டாகும். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். 9ம் பார்வையால் உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தைவெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். ராகு 4-ம் இடமான துலாமில் இருப்பதால் நன்மை தர இயலாது. ஜூன்21ல் ராகு துலாமில் இருந்துகன்னிக்கு மாறுகிறார். 3-ம் இடம் என்பதால் அவரால், காரியவெற்றி, பொருளாதார வளம், குடும்ப மகிழ்ச்சி, தொழில் விருத்தி உண்டாகும். கேது 10-ம் இடமான மேஷத்தில் இருப்பதால்உடல் உபாதை உருவாகும். ஜூன்21 கேது மேஷத்தில் இருந்து மீனத்திற்குமாறுவதால் நன்மை பல தருவார். சனிபகவான் 4-ம் இடமான துலாமில் உள்ளார். இது சிறப்பான நிலை அல்ல. தற்போது அவர் வக்கிரத்தில் சிக்கி இருப்பதால் சிறப்பாக இயங்க முடியாது. அதனால் கெடுபலன் உண்டாகாது.மாறாக நன்மையே நடக்கும். டிசம்பர் 16ல் சனிபகவான் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார். அவர்திருப்தியற்ற நிலையில்இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை சிறப்பாக உள்ளது. இதனால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள்  உறுதுணையாக செயல்படுவர்.பொருளாதார வளம் கடந்த காலத்தைவிட சற்றுஅதிகரிக்கும். ஆனால்அதற்கு சற்று முயற்சி எடுக்கவேண்டியதிருக்கும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். ஜூன் 21 முதல் சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் அவ்வப்போது கருத்து வேறுபாடு உண்டாவதை தவிர்க்க முடியாது. வீடு, மனை வாங்கும் முயற்சி தள்ளிப் போகலாம். ஜூன் முதல் தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் விஷயமாக வெளியூர் பயணம் சென்று வருவர். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை ஆரம்பத்தில் கிடைக்காது. ஆனால் ஜூன் 21 க்கு பிறகு லாபம் அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். அரசின் உதவி கிடைக்கும். எதிரிதொல்லையை எளிதில் முறியடிப்பீர்கள்.

பணியாளர்கள்: உத்தியோகத்தில் சீரான பலனைக் காணலாம். பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உங்கள் திறமைக்கு ஏற்ப மதிப்பு, பாராட்டு இல்லாமல்போகலாம். சிலருக்கு இடமாற்றம் வரலாம்.அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. ஜூன் 21 முதல் முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சற்று முயற்சி செய்தால் உங்கள் கோரிக்கை நிறைவேறும்.

கலைஞர்கள்ஆண்டின் தொடக்கத்தில் சிரத்தைஎடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்களைப் பெறமுடியும். பிற்பகுதியில் நன்மை அதிகரிக்கும்.அரசியல்வாதிகள்: எதிலும் விடாமுயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்காது. ஜூன் முதல் பணப்புழக்கத்திற்கு எந்தகுறையும் இருக்காது. புதிய முயற்சியில்முன்னேற்றம் காண்பர்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டுஅக்கறையுடன் படிப்பது நல்லது. அதிக உழைப்பு கூடுதல் மதிப்பெண்ணுக்கு வழிவகுக்கும்.

விவசாயிகள்: பொருளாதாரவளத்தில் எந்த குறையும்இருக்காது. ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

பெண்கள்: புத்தாடைஅணிகலன் வாங்கிமகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அமைதியும், பொறுமையும் தேவை. அக்கம்பக்கத்தாரிடம் வீண் வாக்குவாதம்வேண்டாம்உடல்நலம் சிறப்படையும்.மருத்துவச் செலவு குறையும்.

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status