Skip to main content

நிலக்கடலை - ரகசியங்கள் / பலன்கள் / ஆரோக்கிய வழிமுறைகள்:

நிலக்கடலை - ரகசியங்கள் / பலன்கள் / ஆரோக்கிய வழிமுறைகள்:

சுறுசுறுப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு:
(சத்குரு கூறும் வழிமுறை)

தினமும் 2 - 3 கைப்பிடி பச்சை நிலக்கடலை  (தோல் நீக்கியது எடுத்து அதனை, இரவு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். (குறைந்தது 6 முதல் 8 மணி  நேரம் கண்டிப்பாக ஊற வேண்டும், இவ்வாறு செய்வதன் மூலம் அதன் பித்த தன்மை முழுவதுமாக நீங்கி விடுகின்றது )


ஊற வைத்த தண்ணீரை தவிர்த்துவிட்டு,
காலையில் அந்த கடலையை எடுத்து அதனுடன் 2 வாழைப்பழம் சேர்த்து மிக்சியில் இட்டு அரைத்து அப்படியே உட்கொண்டால் நமது உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் கிடைத்து விடும். (காலை மற்றும் மதிய உணவு சாப்பிடுவதற்கு பதிலாக)  நமது ஜீரண உறுப்புக்களுக்கு அதிகம் வேலை கொடுக்காததால் நமது உள் உறுப்புகளும் புத்துணர்ச்சியுடன் செயல் படும்.

வாழைப்பழம் இல்லாமல் வெறும் நிலக்கடலையை கூட சாப்பிட்டுக்கொள்ளலாம்...
  
இப்பொழுது யாரை கேட்டாலும் நான் டயட்டில் (Diet) இருக்கிறேன் என்று கூறுவது வாடிக்கையாகி விட்டது. அப்படி இருப்போர் அனைவரும் இந்த முறையை பின்பற்றினால் அவர்கள் உடல் எடையும் குறையும், உடல் நலத்திற்கும் நல்லது....

முயற்சி செய்து பாருங்கள் ! முடிந்தவரை மற்றவர்களுடன் பகிருங்கள் !!!

நன்றி : சத்குரு 


இப்பொழுது, நிலக்கடலையின் மற்ற பல்வேறு  பலன்கள் பற்றி பார்ப்போம் ....
(இவை அனைத்தும் வெவ்வேறு புத்தகங்களில் இருந்தும், மற்றும் சில தானிய ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளிலும் இருந்து தொகுக்கப்பட்டவை) 

நீரழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குகிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.


பித்தப் பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டுவந்தால் பித்தப்பை கல் உருவா வதைத் தடுக்க முடியும். 20 வருடம்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வ ரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்:
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில்பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் B3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம்நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்றமூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று  நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும்கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் மோனோ அன் சாச்சுரேட்டேட் (Monounsaturated fatty acids) வகை கொழுப்பு உள்ளது. பாலி அன்சாச்சுரேட்டேடு (Polyunsaturated) 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும்கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. ஒருவேளை, இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலையை அதிக விலை கொடுத்து சாப்பிட வேண்டியது வரலாம்...

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பி விடப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறதுபெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், (Folic Acid) பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள்  நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அதுகொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலைசெடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ளபறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்லஉதாரணம்.


நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி 
கரையும் கொழுப்பு - 40 மி.கி. 
புரதம்- 25 மி.கி 
ட்ரிப்டோபான்- 0.24 கி. 
திரியோனின் - 0.85 கி  
ஐசோலூசின் - 0.85 மி.கி. 
லூசின் - 1.625 மி.கி. 
லைசின் - 0.901 கி  
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி 
கிளைசின்- 1.512 கி  
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி  
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) - 93.00 மி.கி. 
காப்பர் - 11.44 மி.கி. 
இரும்புச்சத்து - 4.58 மி.கி. 
மெக்னீசியம் - 168.00 மி.கி 
மேங்கனீஸ் - 1.934 மி.கி 
பாஸ்பரஸ் - 376.00 மி.கி. 
பொட்டாசியம் - 705.00 மி.கி 
சோடியம் - 18.00 மி.கி 
துத்தநாகச்சத்து - 3.27 மி.கி 
தண்ணீர்ச்சத்து - 6.50 கிராம் 
போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பிஉள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு .


வாழ்க வளமுடன் !!!

என்ன அன்பர்களே, இனி தினமும் சிறிதளவு அல்லது வாரத்திற்கு இருமுறையாவது நிலக்கடலை எடுத்துக்கொள்வதை வாடிக்கையாக்கி கொள்வோமா ?

சிறந்த ஆன்மீகத்திற்கு சிறந்த உடல்நலம்  தேவை... உடல்நலம் காப்போம்...
ஒரு துளி ஆன்மீகம் பருகுவோம்...

ஓம் நமஷிவாய ...ஹரி ஓம் ...

உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

நன்றி ...


ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி... 

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status