கார்த்திகை மாதம் தீபம்
ஏற்றுவதன் மகத்துவம்
என்ன ?
சத்குருவின் விளக்கம் :
ஒரு வருடத்தின் இந்த
பாகத்தை, தக்ஷிணாயனம்
(அ) சாதனா
பாதை என்று
அழைப்பர். இதில்
இந்த கார்த்திகை
மாதத்தில் தான்
நாம் ‘கைவல்ய
பாதைக்குள்’ மெதுமெதுவாக அடி
எடுத்து வைக்கும்
நேரம். யோக
சாதனா செய்யும்
வகையில், தக்ஷிணாயனம்
என்பது தீவிரமாக
யோக சாதனாவில்
ஈடுபட்டு, நம்மை
சுத்திகரித்துக் கொள்வதற்கான நேரம். உத்தராயணமோ ஞானோதயம்
பெறுவதற்கான நேரம். சாதனா பாதையில் உழுவை
செய்து, விதை
விதைத்து, பயிர்
செய்தாயிற்று. இப்போது நீங்கள் செய்த ‘சாதனா’விற்கான பலன்களை அறுவடை
செய்யும் நேரம்.
இந்த நேரத்தில்
தான் உங்கள்
சாதனாவின் பலன்களை
உங்களுக்கு பயன்படும் விதத்தில் நீங்கள் பெற்றுக்
கொள்ள முடியும்.
இதை பல
கதைகளில் கேட்டிருப்பீர்கள்.
பிதாமகர் பீஷ்மர்,
சாதனா பாதையில்
இறக்க விரும்பாமல்,
அம்புப் படுக்கையில்
காத்திருந்து, ‘உத்தராயண’த்தில்
உயிர் நீத்தது
நாம் அனைவரும்
அறிந்த கதைதான்.
அவர் உத்தராயணத்தில்
(அ) கைவல்ய
பாதையில் இறக்க
விரும்பியதற்கான காரணம், அந்த நேரத்தில் தான்
வாழ்க்கையின் பலன்களை அறுவடை செய்யமுடியும். நம்
உள்நிலையில் அறுவடை செய்ய வேண்டியவற்றை கைவல்ய
பாதையில் மிக
எளிதாக அறுவடை
செய்துவிடலாம்.
இந்த கார்த்திகை மாதம்,
சாதனா பாதையில்
இருந்து கைவல்ய
பாதைக்கு மெதுவாக
மாறும் நேரம்.
இந்நேரத்தில் விளக்குகள், அதில் இருந்து வெளிவரும்
ஒளி, ஞானோதயம்,
விழிப்புணர்வு, முக்திக்கான அடையாளக் குறியீடுகள். இதைக்
குறிப்பதற்குத் தான் வீட்டிலே பல விளக்குகள்
ஏற்றி வைக்கிறோம்.
இது ஏதோ
ஒரே ஒரு
விளக்கை ஏற்றுவதைப்
பற்றி அல்ல.
நம் கலாச்சாரத்தில்
பொதுவாக கார்த்திகை
மாதத்தில், எப்போதும் ஏற்றுவதை விட இரண்டு
மடங்கு அதிகமாக
தீபம் ஏற்றுவார்கள்.
ஒன்று, வருடத்தின்
இந்த நேரத்தில்
பகல் நேரம்
குறைவாக இருப்பதால்,
நம் தினசரி
வேலைகளை செய்ய
நமக்கு இன்னும்
கொஞ்சம் அதிகமாக
வெளிச்சம் தேவைப்படும்
என்பதால். மற்றொன்று
நம் வாழ்வில்
ஒளியை பெருக்கிக்
கொள்ளும் நேரம்
இது என்பதால்.

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு
மனிதருக்கும் என்றால், நமக்கு 700 கோடி விளக்குகள்
ஏற்ற வேண்டும்.
ஆனால் எல்லோருக்கும்
நாம் ஒருவரே
ஏற்ற முடியாது
என்பதால், இந்த
மாதத்தின் ஒவ்வொரு
நாளும் நீங்கள்
குறைந்தது இதையாவது
செய்யவேண்டும். உங்களுக்கென்று ஒன்று, உங்களுக்கு நெருக்கமானவருக்கு
ஒன்று, உங்களுக்கு
சிறிதும் பிடிக்காதவருக்கு
ஒன்று, என்று
குறைந்தது மூன்று
விளக்கேனும் நீங்கள் தினமும் ஏற்ற வேண்டும்!
வாழ்க வளமுடன் !!!
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...
...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...
லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
திருநெல்வேலி
#KarthigaiDheepam
#MeaningForDheepam
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
Comments
Post a Comment