நாம் ஒன்று கவனிக்க வேண்டும். ‘சந்தனாபிஷேகம்’, ‘க்ஷீராபிஷேகம்’ என்கிற மாதிரியே பல பேர் ‘பாலாபிஷேகம்’ என்கிறார்கள். அது தவறு. ‘பாலபிஷேகம்’ என்று ‘ல’வைக் குறிலாகவே சொல்ல வேண்டும்.
‘சந்தன’ ‘க்ஷீர’ என்ற வார்த்தைகள் ‘அ’காரத்தில் முடிவதால், அவற்றோடு ‘அபிஷேகம்’ என்று ‘அ’காரத்தில் ஆரம்பிக்கும் வார்த்தையைச் சேர்க்கும்போது இரண்டு குறில் ‘அ’காரங்கள் சேர்ந்து ஒரு நெடில் ‘ஆ’காரமாகி, ‘சந்தனாபிஷேகம்’, ‘க்ஷீராபிஷேகம்’ என்ற கூட்டு வார்த்தைகள் உண்டாகின்றன.
‘பால்’ என்கிற வார்த்தை ‘அ’காரத்தில் முடியாமல் ‘ல்’ என்ற ஒற்றெழுத்துடன் முடிகிறது. அதோடு ‘அபிஷேகம்’ சேரும்போது, ல்+அ என்பது (குறிலான) ‘ல’ ஆகத்தான் வருமாதலால் ‘பாலபிஷேகம்’ என்று தான் ஆகும்.
தேன் + அபிஷேகமும் இப்படியேதான் – ‘தேனபிஷேகம்’ ஆகுமே தவிர ‘தேனாபிஷேகம்’ இல்லை.

இதே மாதிரிதான் ‘ஷடாக்ஷரம்’ என்பதும் தவறு. ஷடக்ஷரம் என்பது தான் சரி. பஞ்ச + அக்ஷரம் – பஞ்சாக்ஷரம்; அஷ்ட + அக்ஷரம் – அஷ்டாக்ஷரம் என்கிற மாதிரி இல்லாமல் ஷட்+அக்ஷரம் என்றே இருப்பதால் ஷடக்ஷரம் என்றே ஆகும்…
ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர !!
ஹரி ஓம்...
உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...

தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி...
Comments
Post a Comment