சுவாமி சிவானந்தரின் பொன் மொழிகள் பல ... அவற்றில் சில இன்று ....
English version is available in end of this Article:
கடவுளின் அளவுகோல் என்ன?
எத்தனை முறை பிரார்த்தனை செய்யப்பட்டது, எத்தனை தடவை மந்திரங்கள் ஜபிகப்பட்டன, எத்தனை முறை விளக்குகள் ஏற்றப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டன, எத்தனை முறை மறை நூல்கள் வாசிக்கப்பட்டன போன்றவற்றால் மனிதரின் செயல்களை தெய்வீக அளவுகோல்கள் மதிப்பிடுவதில்லை.
நமது இதயத்தில் எழும் எண்ணங்களின் தரத்தை பொறுத்து, எத்தகைய வார்த்தைகளை நாம் அண்டை வீட்டாரிடம் பயன்படுத்துகிறோமோ அவற்றை பொறுத்து நமது வாழ்வை யார் யாருடன் கழிக்க வேண்டும் என்று இறைவன் விதித்து இருக்கிறானோ அவர்களுடன் நாம் ஈடுபடும் ஒவ்வொரு செயலையும் பொறுத்தே தெய்வீக அளவுகோல்கள் மனிதனை மதிப்பிடுகின்றன....
மன அமைதி வேண்டுமா ?
நல்ல ஆரோக்கியமும், பொருளாதார பாதுகாப்பும் மன அமைதிக்கு மிகவும் முக்கியமானது என்பது எல்லோரும் அறிந்ததே ...ஆனால் இவை இருப்பினும் பலரும் தொடர்ந்து மன அமைதி இன்றி அல்லல் படுகின்றனர்..
இதற்கு ஆமாம் என்று நீங்கள் பதில் சொன்னால் ? ! - உங்களது தொல்லைகள் பெரும்பாலும் நீங்களாகவே உண்டாக்கி கொண்டதாக இருக்கும். இது தவிர்க்கப்பட கூடியதே... நீங்கள் அடிக்கடி பிறர் விஷயங்களில் தலை இடுகிறீர்களா ? அவர்கள் தவறாகவே இருக்கலாம். ஆனால் அதை முன்னிட்டு நீங்கள் அல்லல் உருவானேன் ? யாரையும், எதையும் குறை கூறாதீர்கள்.
பிறருக்கு தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் உங்களுக்கு வழங்க வில்லை. எல்லாரும் அவரவர் விருப்ப படியே நடக்கின்றனர். ஏனெனில், அவர்களுக்கு உள்ளே இலங்கும் கடவுள் அவர்களை அப்படி செய்ய தூண்டுகிறார். உங்கள் அமைதியை பாதுகாக்க நீங்கள் உங்கள் சொந்த வேலையில் மாத்திரம் கவனம் செலுத்தினால் போதும் என்பது ஒரு நல்ல விதியாகும்....
வாழ்க வையகம் !!! வாழ்க வளமுடன் !!!
சிவாய நமக !!!
English Version:
Measurement of God:
It is not measured by how many times we pray, how many times we are chanting the manthras, how many times we lighten the ghee lamps and how many times we studied the puranas. It will be measured by our good and clean thought, how we are interacting with others and our neighborhoods and how we are spending our time with whoever we are meeting (determined by the God) in our life.
So, our thought should be good and clean always.
Peaceful Life:
Health and Sufficient money is necessary for peaceful life. But apart from that, even if we are having these two things in sufficient manner still we struggling for peaceful life.
If your answer is YES, then you have to follow this: You are the maker of your troubles. This can be avoidable. Are you interfering often with others for any topic? Even though they are wrong, but why you are suffering for that? Don’t allege any.
God does not give you the power to adjudicate the others. As they are walking on their own choices. They are also having 'God' inside to them and they may act accordingly. You can pay your attention only to protect your own work which is the good rule.
Comments
Post a Comment