Skip to main content

தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம் - "ஸாதுக்கள் தரிசனம், சாப விமோசனம்"

தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்...


ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...

144 வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடிய "தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்" பற்றியும், திருநெல்வேலியில் பல்வேறு தீர்த்த கட்டங்களில் சிறப்பாக நடைபெற உள்ளது என்பதனையும்  நாம், நமது முந்தைய பதிவுகளில் எழுதி வந்து கொண்டிருக்கிறோம்...

தற்பொழுது திருநெல்வேலியில் உள்ள நமது வண்ணார்பேட்டை அருள்மிகு ஸ்ரீ "பால சுப்பிரமணியர் கோவில் - குட்டத்துறை படித்துறை" அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு ....

ஒவ்வொரு படித்துறையிலும் ஒரு துறவியர் புஷ்கர நாட்கள் முழுவதும் இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்க   "அகில பாரதிய சாது துறவியர்கள் சங்கம் மூலமாக" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது... 

அந்த வகையில் நமது வண்ணார்பேட்டை அருள்மிகு ஸ்ரீ "பால சுப்பிரமணியர் கோவில் - குட்டத்துறை படித்துறை" யில், வேலூர் "தவத்திரு. ஸ்ரீ சிவ பிரத்யங்கரா தாஸ் ஸ்வாமிகள்" அருளாசி வழங்க உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...

"ஸாதுக்கள் தரிசனம், சாப விமோசனம்" என்று சொல்வார்கள்...

ஆன்மீக அன்பர்கள் இந்த மஹா புஷ்கர புண்ணிய நாட்களில்  "தாம்ரபர்ணீ" நதி தீரத்தில் ஏதாவது ஒரு படித்துறையில் புனித நீராடி அங்குள்ள "ஸாதுக்களை" தரிசனம் செய்து நமது பாவங்களை போக்குவோம்...

ஒவ்வொரு படித்துறையிலும் ஆசி வழங்கும் துறவியர்கள் பற்றிய விவரம் நாளை பதிவிடப்படும்...மேலும், நமது வண்ணார்பேட்டை படித்துறைக்கு என தனியாக ஒரு சிறப்பம்சம் மிக்க வரலாறு உள்ளது...அதனை விரைவில் தனியாக பதிவிடுவோம்...




Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status