காய்கறி தோட்டம் உங்கள் வீட்டு மாடியில் ......     வீட்டின்  மாடியில்  காய்கறித்  தோட்டம்  அமைக்க  50 சதவீத  மானியம்  வழங்கும்  புதிய   திட்டத்தை  தமிழக  அரசு  அறிமுகப்படுத்தியுள்ளது . " நீங்களே  செய்து  பாருங்கள் ' என்ற  பெயரில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  இந்தத்  திட்டம்  முதல்  கட்டமாக  சென்னை  மற்றும்  கோவையில்  புதன்கிழமை  ( டிச .18, 2013)  தொடங்கப்பட்டது . இதற்கான  தொடக்க  விழா  வேளாண்துறை  அமைச்சர்  செ . தாமோதரன்  தலைமையில்  சென்னையில்  நடைபெற்றது .      இந்தத்  திட்டத்தின்  கீழ் , வீட்டு  மாடியில்  தோட்டம்  அமைக்கத்  தேவையான  காய்கறி  விதைகள் , உரங்கள் , பாலிதீன்  பைகள்  உள்ளிட்டவை  50 சதவீத  மானியத்தில்  வழங்கப்படுகின்றன . என்னென்ன  காய்கறிகள் : கத்தரி , வெண்டை , தக்காளி , மிளகாய் , அவரை , கொத்தவரை , முள்ளங்கி , கீரைகள் , கொத்தமல்லி  ஆகியவற்றை  மாடி  தோட்டத்தில்  வளர்க்கலாம் . இந்த  செடிகள்  அனைத்தையும்  வளர்க்க  மொட்டை  மாடியில்  160 சதுர  அடி  இடம்  இருந்தால்  போதுமானது . இதற்கான  மகசூல்  காலம்  30 நாள்களில்  இருந்து  6 மாதங்கள்  வரை  ஆகும் . மாடித்  தோட்ட...