திருமண மந்திரங்களின் உண்மையான அர்த்தம் என்ன ? சாஸ்திரங்கள் கூறும் உண்மையான அர்த்தம் பற்றி ' மகாமகோபாத்யாய' "ஸ்ரீ சேஷாத்ரி நாத சாஸ்திரிகள்" விளக்கம்  ?    நன்றி: சக்தி விகடன்     தி ருமண மந்திரங்கள் அபத்தமானவையா ? ? இல்லவே இல்லை... அவை மிகப் புனிதமானவை; ஆழமான அர்த்தம் பொதிந்தவை.    இது குறித்து 'மகாமகோபாத்யாய' ஸ்ரீசேஷாத்ரிநாத சாஸ்திரிகள், 2005- ம்  ஆண்டு  "சக்தி விகடனில்" எழுதிய விரிவான கட்டுரையை, இதோ உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்...     ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும்’ என்று ஒரு பழமொழி. இதற்கு ஏதேதோ அர்த்தங்கள் சொல்கிறார்கள். ஆனால், கல்யாணத்தின்போது இதற்கு வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பொருளே வேறு.    மணப்பெண் - மணமகள் இருவருமாகச் சேர்ந்து அக்னி பகவானிடம் வேண்டுகிறார்கள். அப்படி வேண்டுவது பதினாறு விஷயங்களை. அவற்றை அக்னி பகவான் அருள, இவர்கள் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கிறார்கள்.       சரி, அந்தப் பதினாறு வேண்டுதல்கள் என்னென்ன?     பெண் குழந்தை பிறந்ததிலிருந்து கல்யாணம் வரை யிலும் உள்ள கால இடைவெளியை மூன்று பிரிவாகப் பிரித்து, ஒவ்வொரு பிரி...