Skip to main content

Posts

Showing posts from May, 2026

முதுகுத்தண்டை வலுவாக்கும் 'புஜங்காசனம்' ! ! !

  முதுகுத்தண்டை வலுவாக்கும் ' புஜங்காசனம் '! ஆரோக்கியத்தில் ஒரு துளி... ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம் ... பிரிவு : யோகாசன குறிப்புகள் {Yoga Tips} தலைப்பு : குண்டலினி சக்தியைத் தட்டியெழுப்பும் சர்ப்ப நிலை.   நமது சனாதன தர்மத்தில் , இயற்கையோடு இயைந்து வாழ்வதே யோகக்கலை . இன்று நாம் காணவிருக்கும் ஆசனம் நமது உடலின் மைய அச்சான முதுகுத்தண்டை இரும்பு போல் வலுவாக்கும் ' புஜங்காசனம் ' {Bhujangasana - Cobra Pose} . ஆன்மீக மற்றும் புராண ரகசியம் :   சமஸ்கிருதத்தில் ' புஜங்கம் ' என்றால் ' பாம்பு ' அல்லது ' நாகம் ' என்று பொருள் . நமது தர்மத்தில் நாகங்களுக்கு எப்போதுமே ஒரு தனித்துவமான தெய்வீக சக்தி உண்டு . சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் வாசுகியாகவும் , மகாவிஷ்ணுவின் சயனமான ஆதிசேஷனாகவும் நாகங்களே விளங்குகின்றன . ஆன்மீக ரீதியாக , நமது உடலின் மூலாதாரச் சக்கரத்தில் {Muladhara Chakra} நமது பிராண சக்தியானது ஒரு பாம்பைப் போலச் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கிறது . இதனை ' குண்டலினி...

காஞ்சி மஹா பெரியவா - நடமாடும் தெய்வம் !!!

காஞ்சி மஹா பெரியவா - நடமாடும் தெய்வம் ! அவதாரம் மற்றும் பெற்றோர்கள் : மஹா பெரியவா என்று உலகெங்கும் பக்திப் பரவசத்துடன் போற்றப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் , 1894- ம் ஆண்டு மே மாதம் 20- ம் தேதி , விஜய வருடம், வைகாசி 8ம் நாள், உன்னதமான அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார் . விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள ஈச்சங்குடி என்ற கிராமத்தில் இவரது பிறப்பு நிகழ்ந்தது . இவரது தந்தை கல்வித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய சுப்ரமணிய சாஸ்திரிகள் ; தாயார் மகதாலட்சுமி அம்மாள் . இவர்களுக்குப் பிறந்த இரண்டாவது மகனான இவருக்குப் பெற்றோர் இட்ட பூர்வாஸ்ரமப் பெயர் ' சுவாமிநாதன் ' . இளமைப் பருவமும் கல்விப் புலமையும் : சுவாமிநாதன் சிறு வயதிலேயே கல்வியிலும் , ஒழுக்கத்திலும் அதீத புத்திக்கூர்மை கொண்டவராகத் திகழ்ந்தார் . திண்டிவனத்தில் உள்ள ஆர்சியன் மிஷன் பள்ளியில் பயின்றார் . அங்கு அவருக்குத் தமிழ் , ஆங்கிலம் மற்றும் லத்தீன் மொழிகளில் பெரும் புலமை ஏற்பட்டது . ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஆங்கிலத்தில் மி...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status