ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி... அவதாரம், படைப்புகள், ஸ்ரீரங்கத்தின் 'தானான திருமேனி' மற்றும் சமத்துவ சிலை !!! ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம் ... முன்னுரை: சனாதன தர்மத்தின் வரலாற்றில், பக்தி மார்க்கத்தையும் வேதாந்த தத்துவத்தையும் இணைத்து, சமூக சமத்துவத்திற்காகப் பாடுபட்ட மாபெரும் மகான் ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யர். கி.பி. 1017-ஆம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த இவரது அவதார தினமே "ராமானுஜர் ஜெயந்தி" என உலகம் முழுவதும் உள்ள வைணவர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் இவர், பக்தி இயக்கம் மற்றும் வேதாந்த சிந்தனையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியவர். ஆச்சார்ய வந்தனம் (ஸ்லோகம்) ; ஸ்ரீ ராமானுஜரைத் துதிக்கும் மிக முக்கியமான சமஸ்கிருத ஸ்லோகம்: "யோநித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே" விளக்கம் : எவர் ஸ்ரீமன் நாராயணனின் (அச்யுதன்) திருவடித்தாமரைகளில் கொண்ட எல்லையில்லாப் பக்தியால், உலக இன்பங்கள் அனைத்தையும் வ...

