ஒரு தேசத்தில் குற்றங்கள் குறைய என்ன செய்ய வேண்டும் ? காஞ்சி மஹா பெரியவா கூறும் அ ற வுரை என்ன ? ராஜாங்கம் எதற்காக இருக்கிறது ? ஒரு தேசத்தில் அதிக பலம் உள்ளவர்கள் , குறைந்த பலம் உள்ளவரை ஹிம்ஸிக்கலாம் . பெரிய கூட்டத்தார் சிறிய கூட்டத்தாரை கஷ்டப்படுத்தலாம் . (Editors Note: தற்பொழுது நிலைமை தலைகீழாக உள்ளது என்பது வேறு விஷயம்) பலர் சேர்ந்து ஒருவனை நிர்பந்தப்படுத்தி அவனது சொத்து , வீடு முதலியவற்றை ஆக்கிரமித்துக் கொள்ளலாம் . இப்படி எல்லாம் நேராமல் தேசத்தில் ஒழுங்கு இருக்கச் செய்வதற்கு ஏற்பட்டதே ராஜாங்கம் . தப்புச் செய்பவர்களை அவ்விதம் செய்யாமல் தடுப்பதற்காக ராஜாங்கம் என்ன செய்கிறது ? தண்டனை தருகிறது . தண்டனை உண்டு என்ற பயம் இருப்பதாலேயே பலர் தப்புச் செய்யாமல் தடுக்கப்படுகிறார்கள் . ஹிம்ஸை செய்த ஒருவனுக்கு அவன் செய்ததைக்காட்டிலும் ராஜாங்கம் அதிக ஹிம்ஸை தருகிறது . பத்து ரூபாயை அ...

