இரத்த அழுத்தம் மற்றும் தலை சுற்றல் தீர,ஆயுர்வேதம் கூறும் எளிய உணவு முறை என்ன ? நவீன மருத்துவம் கூறுவது என்ன ? ரத்தக் குழாய்களின் உள்சுவர்களில் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தத்தை ரத்த அழுத்தம் என்கிறோம். ஆறு வயதுக் குழந்தைக்கு 90/60 mm of Hg என்பது இயல்பான ரத்த அழுத்தம். இளமையில் 120/80 mm of Hg முதல் 140/90 mm of Hg வரை இயல்பானது. இதற்கு மேற்பட்டு காணப்படுவது ரத்த அழுத்த நோயாகும். ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் ஏற்படும் கொழுப்பு அடைப்பு அல்லது கொழுப்புடன் கூடிய சுண்ணாம்புச் சத்து படிவங்கள் அந்தச் சுவர்களைக் கடினமாக்குவதால் ஏற்படும் உபாதை இது என்று நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆயுர்வேதம் கூறுவது என்ன ? மனதைச் சார்ந்த 'ரஜஸ்' எனும் தோஷமும் உடலைச் சார்ந்த 'வாதமும்', 'பித்த' தோஷமும் சீற்றமடைவதால் தலைச்சுற்றல் ஏற்படுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. இவையே ரத்த அழுத்தத்திற்கும் காரணமாகலாம் என்பதை ஊகித்தறியலாம். இந்தத் தோஷங்களின் சீற்றம் ஏற்படக் காரணமாக – முறையற்று மனம் போனபடி உடலுக்கொவ்வாததை உண்பதும், புளிப்பும், உப்பும், உறைப்பும் அதிக...

