கார்த்திகை தீப ஸ்லோகம் என்ன ? அதன் அர்த்தம் என்ன ? கார்த்திகை தீபம் ஏற்றும் பொழுது என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று நமது 'ஒரு துளி ஆன்மீகம்' குழுவில் அன்பர் ஒருவர் இந்த சிறியவனிடம் கேட்டிருந்தார். வழக்கம் போல இந்த சிறியவன் பதில் தேடி செல்லும் இடம் எங்கே ? ஆம், அந்த மஹா பெரியவா தான் ... இதோ மஹா பெரியவா, அருளிய தகவல் 'தெய்வத்தின் குரலில்' இருந்து... கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும் போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது. கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா: ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா: | த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா: || இதன் அர்த்தம் என்னவென்றால்... "புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற விருட்சமோ, (மரம்) இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யர்களு...