மனிதருள் மாணிக்கமாய் போற்றப்படும் ஸ்ரீ ராமரிடமிருந்து என்ன கற்கலாம் ? சத்குருவின் வித்தியாசமான பார்வையில் விரிகிறது இந்தக் கட்டுரை ... இந்திய மக்கள்தொகையின் பெரும்பான்மைப் பகுதி ராமனை போற்றி வணங்குகிறது , ஆனால் அவர் வாழ்க்கை சூழ்நிலைகளை நீங்கள் பார்த்தால் , வாழ்க்கை அவருக்கு நிகழ்ந்த விதத்தைப் பார்த்தால் , தொடர்ந்து அவருக்கு பேரிழப்புகள் நிகழ்ந்துகொண்டே இருந்தது போலத் தோன்றும் . தனக்கு சேரவேண்டிய இராஜ்ஜியத்தை இழந்து வனவாசம் செல்ல நேர்ந்தது . போர் தொடுக்க விருப்பமில்லாத போதும் மனைவியை அபகரித்துச் சென்றதால் போர்செய்ய நேர்ந்தது . மனைவியை மீட்டுவந்த பிறகு , சுற்றியுள்ள அனைவரும் மனைவியைப் பற்றி அவதூறாகப் பேசுவதைக் கேட்க நேர்ந்தது . அதனால் மிகவும் பிரியமான மனைவி கர்ப்பிணியாய் இரண்டு குழந்தைகளை சுமந்திருந்த போதும் அவளை காட்டில் விட்டுவர நேர்ந்தது . பிறகு அறியாமலே தன் பிள்ளைகளுக்கு எதிராகவே போரிட்டு மனைவியை தொலைக்க நேர்ந்தது . அவர் வாழ்க்கை முழுவதும் இழப்புகள் மட்டுமே . அப்படியிருந்...