' திருச்செந்தூர் கந்தர் கலி வெண்பா ' இரத்தம் சம்பந்தமான நோய்கள் தீர்க்கும்... இரத்தக்கொதிப்பு இருப்பின் கட்டுக்குள் வைக்கும்... கலி வெண்பா சொல்வதாலும் (அ) கேட்பதாலும் மனம் அமைதியடையும்... நமது சிந்தனை தெளிவடையும்... கந்தர் கலி வெண்பா வீடியோவை காண இங்கு கிளிக் செய்யவும்... ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் அருளியது... பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் .. தேமேவு நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த போதமும் காணாத போதமாய் .. ஆதிநடு ...... 1 அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப் பந்தம் தணந்த பரஞ்சுடராய் .. வந்த குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும் செறியும் பரம சிவமாய் .. அறிவுக்கு ...... 2 அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் .. தனாதருளின் பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும் தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் .. எஞ்சாத ...... 3 பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும் காரணமும் இல்லாக...