Skip to main content

Posts

தை அமாவாசை தர்ப்பணம் ஏன் ? காஞ்சி பெரியவா விளக்கம்...

வாழ்க வளமுடன் !!! தை அமாவாசை 08-02-2016   ஆடி அமாவாசை போன்று தை அமாவாசையும் எவ்வளவு முக்கியமானது என்று உங்கள் அனைவருக்குமே தெரிந்து இருக்கும். அன்று நமது முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வது வழக்கம்.  ஆனால், பலரும் இதனை ஒரு கடமை என்றே செய்வர். (அதிக விருப்பம் இல்லாவிட்டாலும்). இதற்கு பின்னால் உள்ள அத்தியாவசியத்தை நாம் புரிந்து கொண்டோமானால் இதனை சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பது புரியும்.  சிரார்த்தம் என்னும் வார்த்தையே சிரத்தை என்பதில் இருந்து தான் வந்துள்ளது.  இந்த நேரத்தில்,  காஞ்சி மஹா பெரியவா, உரையில் இருந்து ஒரு சில பகுதிகள்  மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அதனை அப்படியே இங்கு கொடுத்துள்ளோம். இதனை படித்த பின்பு தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும் என்பதையும், அதனை எவ்வளவு சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பதனையும் மிக, மிகத் தெளிவாக நாம் உணர முடியும்.  எள்ளும் தண்ணீரும் எங்கே போயின:  மநுஷ்யராகப் பிறந்தவர்கள் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ருக்கடன், தேவ காரியம் என்பவ...

திருவாதிரை திரு நாள் - 26-12-2015

திருவாதிரை திரு நாள்  26-12-2015 : இன்று இரவு 01:00 மணி முதல் நாளை காலை 06:00 மணி வரை பல்வேறு கோவில்களில் மிகவும் சிறப்பாகவும், வெகு விமரிசையாகவும்  கொண்டாடப்படும் திருவாதிரை திருநாள் ... சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் அதற்கு இணையாக திருநெல்வேலி அருகில் உள்ள செப்பறை நடராஜர் கோவில் ஆகிய இரண்டு இடங்களிலும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்... இந்த நேரத்தில், நமது முந்தைய பதிவினை மீண்டும் நினைவு கூறுகிறோம்.... ------------------------ செப்பறை திருக்கோவில் ஸ்தல புராணம்:  English Version is available below (After this Tamil Version): வாழ்க வளமுடன் ! ! ! நாம் முன்பே கூறியது போல, நமது குழுவின் மூலம் செப்பறை திருத்தலத்தின் ஸ்தல புராணம் மிகச்சிறப்பான முறையில் குறுந்தகடுகளாக தயாரிக்கப்பட்டு திருவாதிரை திருநாள் அன்று கோவில் சிவாச்சாரியர்களிடம் C.D. (வீடியோ) வழங்கப்பட்டது. ஸ்தல புராணம் முழுவதையும் நம்மால் இங்கு டைப் செய்திட நேரம் இல்லாத காரணத்தால், அதனை உங்களுக்கு அப்படியே ஒலி-ஒளி வடிவில் (VCD file format) கீழே கொடுத்து இருக்கிறோம். பாகம்-1:...

மார்கழி – செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை !

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை... மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் பெண்கள் இடும் வண்ணக் கோலங்கள், கோவில்களில் வழிபாடுகள் போன்றவைதான்.  இவையெல்லாம் ஏன் இப்படி கடைப்பிடிக்கப் படுகின்றன. இந்த மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? – தெளிவுபடுத்துகிறது இக்கட்டுரை.  சத்குரு:  மார்கழியில் கோள்களின் நிலை : ஆன்மீக மார்க்கத்தில் முன்னேறுவதற்கான தடத்தில், வருடத்தின் குறிப்பிடத்தகுந்த ஒரு காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். தமிழ் மாதம் மார்கழி, டிசம்பர் பாதி தேதியில்  துவங்குகிறது. பூமியின் வடபாதி வட்டத்தில் இது உஷ்ணமாக இருக்க வேண்டிய காலம், ஆனால் அதிக குளிராக உள்ளது. ஏனெனில் நமது கோளத்தின் வடபகுதியின் முன்புறம் சூரிய பார்வையின் நேர்கோணத்தில் இல்லை. பூமிக்கு சூரியன் மிக அருகில் இருக்கும் இந்நேரத்தில் சூரிய கதிர்கள் பூமியில் பட்டுத் தெறித்து விடுகின்றன. பூமி இன்னும் சற்று விலகியிருந்தால் சூரியனின் வெப்பக் கதிர்கள் நம்மை நேரடியாகத் தாக்கியிருக்கும். ஆனால் பூமி...

How to Book the Accommodation in Sabari Mala ? (online booking)

சபரி மலை தேவஸ்வம் போர்டு ரூம் முன்பதிவு செய்வது எப்படி ? For reservation, firstly signup in the login page. An email will be sent to your registered email address contains the username and password.  After login for first time, please change the password. It is mandatory.  You need to login using new username and password. After reservation process is done, use E-payment option. For instant confirmation of room reservation please use E-payment option. To create the User ID, please click here:  After registration, to book the Room Please use this Link:  சுவாமியே சரணம் ஐயப்பா !!!

சிவன் மற்றும் காசி

சிவனை ஈர்த்த காசி : சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உரையில் இருந்து ...  சிவன் வடிவமைக்க, பிரம்மனும், விஷ்வகர்மாவும் காசியை உருவாக்கியதாய் புராணக் கதைகள் சொல்கின்றன. காசியின் கட்டமைப்பும், அதில் கையாளப் பட்டிருக்கும் யுக்திகளும், அதன் நேர்த்தியும், அதை வடிவமைத்தவரின் கணித நுண்ணறிவை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இன்றளவிலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் மிகப் பிரம்மாண்டமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது காசி. அப்படியென்ன அற்புதமான வடிவியல் அது..?  காசி பற்றி சத்குரு :  காசி:  காசியை, ‘ஒளிப் பிழம்பு’ என்பார்கள். அதோடு காசி என்பது தரையில் இல்லை, அது சற்றே உயரத்தில், சிவனின் திரிசூலத்தின் மீது இருக்கிறது என்றும் சொல்வர். இதற்குக் காரணம், ‘காசி’ என்பதற்கு நிலத்தில் ஒரு பொருள் உருவமும், அதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய சக்தி உருவம் இம்மண்ணை விட்டு சற்றே உயரத்தில் இருக்குமாறும் அமைத்தார்கள். இந்த சக்தி உருவம் தரையில் இல்லாமல், மேலே நிறுவப்பட்டிருப்பதால், காசி தரையில் இல்லை, சற்று மேலே உள்ளது என்றார்கள். இங்கு அமைக்கப்பட்ட சக்தி மையங்களில் தேவையான அளவிற்கு மூலைகளு...

மஹா பாரத தத்துவம் ...

பகவான் கிருஷ்ணன் ஏன் பஞ்ச பாண்டவர்களை காப்பாற்றவில்லை? (கண்ணனின் அற்புத விளக்கம்) பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், ''உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார். தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு மகாபாரதத்தில் சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார். ''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்....

LPG Subsidy - Bank Account Link - Aadhar and Non Aadhar Holders

சமையல் எரிவாயு மானியம் பெற : உங்களிடம் ஆதார் எண் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் கீழே கொடுக்கப்பட்ட ஒரே ஒரு படிவம் மட்டும் பூர்த்தி செய்து உங்களது சமையல் எரிவாயு இணைப்பாளரிடம் கொடுத்தால் போதுமானது ..... To get Government Subsidy for LPG: Single form for Aadhar or Non-Aadhar users to link their Bank Account with their LPG Service Providers...