நிலக்கடலை - ரகசியங்கள் / பலன்கள் / ஆரோக்கிய வழிமுறைகள்: சுறுசுறுப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு: ( சத்குரு கூறும் வழிமுறை ) தினமும் 2 - 3 கைப்பிடி பச்சை நிலக்கடலை ( தோல் நீக்கியது ) எடுத்து அதனை , இரவு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் . ( குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் கண்டிப்பாக ஊற வேண்டும் , இவ்வாறு செய்வதன் மூலம் அதன் பித்த தன்மை முழுவதுமாக நீங்கி விடுகின்றது ) ஊற வைத்த தண்ணீரை தவிர்த்துவிட்டு , காலையில் அந்த கடலையை எடுத்து அதனுடன் 2 வாழைப்பழம் சேர்த்து மிக்சியில் இட்டு அரைத்து அப்படியே உட்கொண்டால் நமது உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் கிடைத்து விடும் . ( காலை மற்றும் மதிய உணவு சாப்பிடுவதற்கு பதிலாக ) நமது ஜீரண உறுப்புக்களுக்கு அதிகம் வேலை கொடுக்காததால் நமது உள் உறுப்புகளும் புத்துணர்ச்சியுடன் செயல் படும் . வாழைப்பழம் இல்லாமல் வெறும் நிலக்கடலையை கூட சாப்பிட்டுக்கொள்ளலாம்... இப்பொழுது யாரை கேட்டாலும் நான் டயட்டில் (Diet) இ...