Skip to main content

லோக க்ஷேமம் வேண்டி - மஹா தன்வந்திரி பகவான் ஹோமம்...

மஹா தன்வந்திரி பகவான் ஹோமம்.

  ...நமஸ்காரம்...

...லோக க்ஷேமம் வேண்டி...

கடந்த சில நாட்களுக்கு முன்பாக லோக க்ஷேமம் வேண்டி நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" (TDRS Trust) மூலம் நடைபெற்ற "மஹா ம்ருத்யுஞ்ஜெய" ஹோமத்தினை (08-06-2021) தொடர்ந்து, கடந்த வாரம் (24-06-2021) "மஹா தன்வந்திரி பகவான் ஹோமமும்" மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஏற்கனவே, பெயர் மற்றும் நட்சத்திரம் பதிவு செய்த அன்பர்கள் அனைவருக்கும், இந்த ஹோமத்திலும் தனித்தனியாக ஸங்கல்பம் செய்யப்பட்டது.  (இது ஒரு ஸேவை மட்டுமே... இதற்கு எந்த கட்டணமும் கிடையாது...)

ஹோம நிகழ்வுகள் மற்றும் பூஜை நிகழ்வுகள் அனைத்தும் நமது ஒரு துளி ஆன்மீகம் Youtube Channel ல் நேரலையில் ஒளி பரப்பப்பட்டது... அதனை பல்வேறு அன்பர்களும் அவரவர்கள் இருந்த இடத்தில் இருந்தே கண்டுகளித்தனர். 

ஒரு சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு ...


சென்ற முறை போல, இந்த முறை தன்வந்திரி ஹோமத்தினையும், பண்டிட் ஸ்ரீ . ஹரி ஹர ஷர்மா மற்றும் அவரது குழுவினர்கள் மிகவும் ஸ்ரத்தையோடு நடத்தினார்கள்...







மேலும், தன்வந்திரி பகவான் மந்திரம் சொல்லி ஹோமம் நடைபெற்றபொழுது, பல்வேறு அன்பர்களும் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே அவர்களும் மூல மந்திரம் ஜெபம் செய்து மானஸீகமாக ஹோமத்தில் பங்கேற்று தங்களது மகிழ்ச்சியினை Whatsapp தகவல் மூலம் தெரிவித்தனர். 

நேரலையில் காண முடியாத அன்பர்களுக்காக, இதோ அந்த காணொளி ...

மீண்டும், இது போன்ற ஒரு அற்புதமான லோக ஷேம ப்ரார்த்தனை நிகழ்வினை ஏற்பாடு செய்துவிட்டு நமது ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு தகவல் தெரிவிக்கின்றோம்... 


...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
              திருநெல்வேலி 


Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status