ஆரோக்கியத்தில் ஒரு துளி... பிரிவு: முத்திரைகள் (Mudras) இதயத்தைக் காக்கும் 'சஞ்சீவினி முத்திரை' அபான வாயு முத்திரையின் அற்புதங்கள் ! ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம் ... நமது சனாதன தர்மத்தில் முத்திரைகள் என்பவை வெறும் கை அசைவுகள் அல்ல; அவை பிரபஞ்ச ஆற்றலை நமது உடலோடு இணைக்கும் சூட்சும சாவிகள். இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு மற்றும் ரத்த அழுத்தப் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், சித்தர்களும் யோகிகளும் நமக்கு அருளிய ஒரு மாபெரும் பொக்கிஷம்தான் 'அபான வாயு முத்திரை'. இது இதயத் துடிப்பைச் சீராக்குவதால் இதற்கு 'சஞ்சீவினி முத்திரை' (உயிர்காக்கும் முத்திரை) என்ற பெயரும் உண்டு. சஞ்சீவினி முத்திரை என்றால் என்ன? இது அபான முத்திரை மற்றும் வாயு முத்திரை ஆகிய இரண்டின் கலவையாகும். உடலில் உள்ள தேவையற்ற காற்றை (வாயு) வெளியேற்றி, இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கும் அற்புதமான கலையே இந்த முத்திரை. எப்படிச் செய்வது ? 1. அமைதியான இடத்தில், தரையில் ஒரு விரிப்பு விரித்து சுகாசனத்தில் அமரவும். நாற்காலியில் அமர்ந்தும் செய்யலாம். 2. கண்...

