Skip to main content

Posts

Showing posts from June, 2026

தைராய்டு மற்றும் சுவாசப் பிரச்சனைகளை வேரறுக்கும் 'மத்ஸ்யாசனம்' !

  ஆரோக்கியத்தில்   ஒரு   துளி... ஒரு   துளி   ஆன்மீக   அன்பர்களுக்கு   நமஸ்காரம் ... பிரிவு : யோகாசன குறிப்புகள் {Yoga Tips} தலைப்பு : மகாவிஷ்ணுவின் அவதார நிலை தைராய்டு மற்றும் சுவாசப் பிரச்சனைகளை வேரறுக்கும் ' மத்ஸ்யாசனம் '! நமது சனாதன தர்மத்தில் , ஆசனங்கள் வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல ; அவை இறைவனின் பல்வேறு ரூபங்களை நம் உடலால் வழிபடும் மார்க்கமாகும் . இன்று நாம் காணவிருக்கும் ஆசனம் , மார்புப் பகுதியை விரிவடையச் செய்து உடலுக்கு அபாரமான பிராண சக்தியைத் தரும் ' மத்ஸ்யாசனம் ' {Matsyasana - Fish Pose} . சமஸ்கிருதத்தில் ' மத்ஸ்யம் ' என்றால் மீன் என்று பொருள் . ஆன்மீக மற்றும் புராண ரகசியம் : உலகம் பிரளயத்தால் அழியவிருந்த போது , வேதங்களையும் சப்த ரிஷிகளையும் காக்க மகாவிஷ்ணு எடுத்த முதல் அவதாரமே ' மத்ஸ்ய அவதாரம் ' {Matsya Avatar}. ஒரு மீன் எப்படி நீரின் ஆழத்திலும் சீராகச் சுவாசித்துத் தன் பாதையை அமைத்துக் கொள்கிறதோ , அதே போல சம்சாரக் கடலில் மூழ்கித் தவிக்கும் மனிதன் , இந்த ஆசனத்தைச...

திருஞானசம்பந்தர் - ஞானப்பால் உண்ட நால்வர் பெருமான் !

திருஞானசம்பந்தர்   ஞானப்பால் உண்ட நால்வர் பெருமான்  ! அவதாரம் மற்றும் பெற்றோர்கள் :   சைவ சமயக் குரவர்களுள் முதன்மையானவராகப் போற்றப்படும் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் , கி . பி . 7- ம் நூற்றாண்டில் சோழ வள நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்காழி ( அன்று பிரம்மபுரம் ) என்னும் திருத்தலத்தில் அவதரித்தார் ( இவரது குருபூஜை மற்றும் ஜோதிப் பெருநிலை வைகாசி மூல நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது ). வேத நெறி தழைக்க வாழ்ந்த சிவபாதவிருதயர் இவரது தந்தை ; தாயார் குணவதி அம்மையாரான பகவதி அம்மாள் ஆவார் . இவர்களுக்குப் பிறந்த இப்பெருமகனாருக்குப் பெற்றோர் இட்ட திருநாமம் ' ஆளுடைய பிள்ளை ' என்பதாகும் . மூன்று வயதில் ஞானப்பால் அற்புதம் : ஒருமுறை தந்தை சிவபாதவிருதயர் சீர்காழி தோணியப்பர் கோவில் குளத்தில் நீராடச் சென்றபோது , மூன்று வயது குழந்தையான சம்பந்தரையும் உடன் அழைத்துச் சென்றார் . கரையில் குழந்தையை அமர வைத்துவிட்டுத் தந்தை குளத்தில் மூழ்கி நியமங்களைச் செய்து கொண்டிருந்தார் . தந்தையைக் காணாத குழந்தை ,...

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - June 2026

     ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...  இந்த மாதம், ( ஸ்ரீ பராபவ வருஷம், வைகாசி 18 - ஆனி 16 ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2026 , JUNE   மாதம். முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - JUNE 2026. உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் பகுதியில் பதிவிடுங்கள்... #தாமிரா_தர்ம_ரக்ஷண_ஸபா #OruThuliAanmeegam #ImportantPoojaDays  #முக்கிய_பூஜை_தினங்கள் ...இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)  இதோ இங்கு கிளிக் செய்யுங்கள்...  ...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்...  இதோ இங்கு கிளிக் செய்யுங்கள்...   ...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்... லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்... ...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...         தர்மோ ரக்ஷதி ரக்ஷித:              திருநெல்வேலி. # PoojaDays #June202...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status