Skip to main content

போகி & மகர சங்க்ராந்தி அர்த்தம் என்ன ? மஹா பெரியவா உரை...


போகிப் பண்டிகை மற்றும் மகர சங்க்ராந்தி உண்மையான அர்த்தம் என்ன ? மஹா பெரியவா ஆற்றிய உரையில் இருந்து...


போகிப் பண்டிகை:
ஒவ்வொரு ஆண்டும், தட்சிணாயணம், உத்திராயணம் என இரண்டு பகுதியாகப் பிரிக்கப்படுகின்றது. ஆறு மாதம் தட்சிணாயணம். ஆறு மாதம் உத்திராயணம். சங்கராந்தி முதல் - பொங்கல் முதல், உத்திராயணம் வருகிறது. உத்திராயணம் வடக்கு நோக்கி சூரியனுடைய நிலைமாறுகிறது. அவருடையே போக்கு மாறுகிறது. ஆகவே ஒளி அதிகமாகக் கூடுகிறது. அதற்கு முன் ஒளி சற்று குறைவாக இருக்கும். அதை வைத்துத்தான் சங்கராந்தி நல்ல ஒளியோடு தொடங்கும் நாள் என்று சொல்லப்படுகிறது. அதை வைத்துத்தான் சபரிமலையிலும் ஜோதி தரிசனம் வைத்திருக்கிறார்கள்.

உத்திராயணம் முதல், மங்கள காரியங்களை செய்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஆனால், தட்சிணாயணத்தில் மங்கள காரியங்கள் செய்ய மாட்டார்கள். தட்சிணாயணம் என்பது தேவர்களின் இரவு காலம். ஆகவே இரவு காலத்தில் எந்த மங்கள காரியமும் செய்யக்கூடாது. உதயகாலம் முதல் எல்லாம் செய்யலாம். ஆகவே தை மாதம் முதல் அனைத்து காரியங்களுக்கும் சிறப்பான காலம்.

உஷத் காலம் - மார்கழி மாதம், சாதாரணமாகவே சூரியோதய காலத்தில் பூஜை, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. தேவதைகளுடைய உஷத் காலமாக மார்கழி மாதம் அமைந்துள்ளது. அந்த சமயத்தில் பூஜை, பஜனை போன்றவை தவிர வேறெதுவும் செய்யும் பழக்கமே கிடையாது. இந்த மாதம் பக்தி செய்வதற்கே உண்டானது. இதற்குபின், தை வந்த பிறகு தான் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். பகவத் சம்பந்தமான மங்கள காரியங்கள் மார்கழி மாதத்தில் நடைபெறும். மனித வாழ்க்கை சம்பந்தமான மங்கள காரியங்கள் தை மாதத்தில் நடைபெறும்.

போகிக் பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய நாள். காக்கை முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உணவிடுவது போகிப் பண்டிகையின் விசேஷம். மறுநாள் சங்கராந்தி அன்று பிரத்யட்ச தேவதையான சூரியனுக்கு பூஜை செய்வது விசேஷம். அதற்கு மறுநாள் நமக்கெல்லாம் பால் தரும் பசுவை பூஜிக்க வேண்டிய நாள் இப்படி எல்லா ஜீவராசிகளுக்கும் இந்த மூன்று நாட்கள் மிகவும் பொருத்தமானது.

மனிதன் எல்லா ஜீவராசிகளோடும், தேவதைகளோடும் தனக்குள்ள தொடர்பை நினைவு படுத்திக் கொள்ளும் நாளாக வருவது இந்தப் பொங்கல் திருநாள்.

இந்தப் புண்ணியத் திருநாளில், ஒளி கொடுக்கும் நன்னாளில், நாம் சூரியனை வழிபட்டு, தேவதைகளின் அருளைப் பெற பூஜைகள் செய்து, அந்த ஒளியின் மூலம் நம் மனத்தில் உள்ள இருளை அகற்றி, நல்ல புத்தி ஒளி பெற்று, நல்வழி கிடைப்பதற்கு எல்லோருக்கும் ஆசீர்வாதம் செய்கின்றோம்!

மகர சங்க்ராந்தி / பொங்கல் நன்னாள் வாழ்த்து: 


மனத்தில் உள்ள இருளை அகற்றுபவர் சூரிய பகவான். அவரை வழிபட்டு பொங்கல் திருநாளில் அருளைப் பெறவேண்டும்.


ஆறுவிதமான வழிபாடுகளில் சூரிய வழிபாடு முக்கியமானது. சூரிய வழிபாட்டால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும். பொங்கல், சங்கராந்தி என்று சொல்லக் கூடிய ஒரு பண்டிகை முதல்நாள் போகிப் பண்டிகையாகவும், மறு நாள் சூரிய பூஜையாகவும் உள்ளது. சூரியனுக்குப் பூஜை செய்வதன் நோக்கம், ஒன்று நம் எல்லோருக்கும் விழிப்புணர்வு கொடுத்து, நம்முடைய காரியங்களெல்லாம் செய்வதற்கு வழித்துணையாக நிற்பவர். இரண்டாவது ஆத்மஸ்வரூபத்தை அடைவதற்குச் சாதகமாக உள்ளவர். இருவகையிலுமே சூரிய பகவானை வழி படுகிறோம். புற இருளை அகற்றுவது சூரியன். மனத்திலுள்ள தீய எண்ணங்களை அகற்றுவது சூரியன். மனத்திலுள்ள தீய எண்ணங்களை அகற்றுவது சூரிய வழிபாடு. இப்படிப்பட்ட சூரிய பகவானை நாமெல்லாம் வழிபாடு செய்து பொங்கல் திருநாளில் அருளைப் பெற வேண்டும். 'க்ராந்தி' என்றால் செல்வது, வேகமாகச் செல்வது என்று பொருள், 'சங்கராந்தி' என்றால் மிகவும் தீவிரமாக இருப்பது என்பது. மார்கழி மாதம் வரை குளுமையாக உள்ள சூழ்நிலை மாறி சூரியனுடைய ஒளி மூலம் சூடு ஏற்படும். அதைத்தான் 'சங்கராந்தி' என்கிறார்கள். நம்முடைய இந்தப் புண்ணியக் காலத்தை ஒட்டித்தான் ஆங்கில வருடமும் தொடங்குகிறது.

இந்த, நல்ல நாளிலே நல்லது செய்தால் அதனுடைய பலன் விசேஷமாகக் கிடைக்கும். ஆகவே ஒவ்வொருவரும் நல்ல நாளிலே நல்ல காரியத்தைச் செய்து, நல்ல பயனைப் பெற்று, நம்முடைய வாழ்விலே எல்லா நலமும் பெற வேண்டும்.

ஹர ஹர சங்கர ... ஜய ஜய சங்கர ...

...உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

...நன்றி ...


ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி... 



Comments

Post a Comment

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status